விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - மீனம்

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - மீனம்

சகல வித்தைகளையும் கற்று கொள்ள விரும்பும் மீன ராசி வாசர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ஜென்ம ராகு ஆண்டு துவக்கத்தில் விரைய ராகுவாக அமர்வதும் ஆறாமிட கேதுவாகவும் தொடர்ந்து மூன்றாமிட குரு நான்காமிடத்தில் அமர்வதும் தவிர்க்க முடியாத வெளிநாட்டு பயணம் வெளியூர் பயணங்களாக அமையும். சுகஸ்தானத்தில் ராசிநாதன் குரு அமர்வது நமது உடல்நலனின் பல்வேறு பிரச்சனைகளை தரும் என்பதால் உடல்நலனை பேணி பாதுகாத்து கொள்வது மிக சிறப்பு. குரு பார்க்குமிடம் சிறப்பு என்பது தொழில் ஸ்தானத்தை பார்ப்பதும், மறைவு ஸ்தானங்களான அட்டம ஸ்தானம், விரைய ஸ்தானத்தை பார்ப்பதால் விரையம் உண்டாகாமல் காப்பாற்றுவார்.
 
இந்த ஆண்டு ஜென்ம ராகு இனி விரைய ( 26-04-2025 முதல் ) ஸ்தானத்தில் அமர்வது உங்களின் பூரவீக வீடுகள் அல்லது சொத்துகளை விற்பனை செய்து வேறு இடம் மாறுவதற்கு வாய்ப்பு அமையும். இந்த ஆண்டின் இறுதி வரை விரைய சனியோடு ராகு இருப்பதும், பின்பு சனி பெயர்ச்சியாகி ஜென்ம சனியாக அமரும் போது வேறு இடத்திற்கு மாறுவீர்கள். கேது ஆறாமிடத்தில் அமர்வது திரைமறைவில் இருந்து துன்பம் தந்து வந்தவர்களை விட்டு விலகி விடுவீர்கள்.
 
உங்களின் ராசிநாதன் எங்கிருந்தாலும் நன்மை செய்வார். உங்களின் ராசிக்கு 11.05.2025 முதல் சுகஸ்தானத்தில் பெயர்ச்சியாகி அட்டமஸ்தானத்தையும், தொழில்ஸ்தானத்தையும் விரையஸ்தானத்தையும் ஓராண்டு காலம் பார்வை இடுவதால் சுபவிரையம் உண்டாகும். புதிய வீடு, மனை, இடங்கள் வாங்கும் யோகம் உருவாகும். கடந்த கால விரைய செலவுகள் வராமல் நீங்கள் உங்களுக்கு பாதுகாப்பு சூழ்நிலையை உருவாக்கி கொள்வீர்கள். எதையும் முன்கூட்டியே யோசித்து செய்து நன்மை அடைவீர்கள். தேவை இல்லாதவர்களை பற்றி புரிந்து கொண்டு அவரை விட்டு ஒதுங்கி கொள்வீர்கள்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:  
 
வியாழன், வெள்ளி, ஞாயிறு.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: 
 
மஞ்சள், வெண்மை, சிவப்பு.
 
அதிர்ஷ்ட எண்கள்: 
 
3, 4, 6, 9.
 
பரிகாரங்கள்:
 
செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியருக்கு நெய் தீபமிட்டு சிவப்பு நிற பூ மாலை சாற்றி வேண்டிக் கொள்ளவும். சனிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்க மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி வேண்டிக் கொள்ள சகல நலன்களும் உண்டாகும்.
 
கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554