2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - சிம்மம்

2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - சிம்மம்

தைரியமும், துணிச்சலும் கொண்டு தன்னுடைய செல்களை செய்யும் சிம்ம ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் பஞ்சமாதிபதி குரு வீட்டில் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்ப்பதும் குரு மே மாதம் வரை தொழிலில் ஸ்தானத்தில் அமர்வதால் தொழில் பல சிரமங்கள் உண்டாகும். செய்யும் தொழிலில் பல முயற்சிகள் தடைபட்டாலும் உங்களின் தொழில் பெரிய பாதிப்பை தராது. எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் நல்லதாக அமையும்.
 
உங்களின் ஏழாம் அதிபதி சனி களத்திர ஸ்தானத்தில் சுக்கிரனுடன் இணைவதால் கணவன் மனைவி உறவு சிறு சிறு சச்சரவுகளை தரும். மனைவியுடன் வாக்குபோதும் செய்வதை தவிர்த்து அனுசரித்து செல்லுவது நல்லது. உங்களின் யோகாதிபதி செவ்வாய் விரையஸ்தானத்தில் ஆண்டு துவக்கத்தில் இருந்தாலும் படிபடியாக நீங்கள் நல்ல நிலைக்கு வருவீர்கள். 
 
மே மாதத்திலிருந்து உங்களின் வாழ்க்கை சூழ்நிலை சிறப்பாக அமையும். கிடைத்த எந்த வாய்ப்பையும் வளப்படுத்திக் கொள்வீர்கள். நினைத்த காரியம் கைகூடும். அரசியலிலும், உத்தியோகத்திலும் திறம்பட செயல்படுவீர்கள். உங்களின் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு பல வாய்ப்புகள் வரும் அதனை பயன்படுத்தி கொள்வீர்கள்.
 
முதலீடுகள் இல்லாத தொழில் வாய்ப்பை பெறுவீர்கள். கொடுத்த சில வாக்குறுதிகளை நிறைவேற்ற காலம் எடுத்த கொண்டாலும் விரைவில் நிறைவேற்றி வைப்பீர்கள். பெண்கள் பிடிவாத குணத்தை விட்டுவிட்டு அனுசரித்து செல்வீர்கள். வாகன வசதிகளை பெறுவீர்கள். பதிலுக்கு பதில் பேசுவதை தவிர்த்து பொறுமையுடன் செயல்பட்டால் எல்லா வெற்றியை தரும்.
 
மாணவர்களுக்கு சிறப்பான ஆண்டாக அமையும் சிலருக்கு அவர்கள் விரும்பிய கல்வி பிரிவு கிடைக்க பெறுவீர்கள். தனஸ்தானத்தில் கேது இந்த ஆண்டு ராசிக்கு பெயர்ச்சி ஆகும். பொது இன்னும் பல திறமைகளை வளர்த்து கொண்டு சிறப்பாக செயல்படுவீர்கள். செயலில் உறுதியும், மேன்மையும் இனி தொடர்ந்து அனுபவிப்பீர்கள்.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
1, 2, 3, 6.
 
அதிர்ஷ்ட மாதங்கள்:
 
ஜனவரி, ஏப்ரல், மே, ஜுன், ஆகஸ்ட், டிசம்பர்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
சிவப்பு, மஞ்சள், வெண்மை.
 
பரிகாரங்கள்:
 
சனிக்கிழமை ராசி காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமும் தெரு நாய்களுக்கு பிஸ்கட் சாப்பாடு கொடுத்து தொடர்ந்து செய்து வருபவருக்கு இனிமையான வாழ்க்கை சூழ்நிலை அமையும்.