குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - சிம்மம்

குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - சிம்மம்

தைரியத்திற்கும், துணிச்சலுக்கும் முக்கியத்துவம் தரும் சிம்ம ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிநாதன் உச்சம் பெற்றிருப்பதும். குரு பார்வை பெறுவதும் உங்களுக்கு நற்பலன்களையும், ஏற்றமும் தரும். வருமானம் அதிகரிக்கும். அதுபோல நட்சத்திர அந்தரத்தில் விரையமும் அதிகரிக்கும் என்பதால், அனாவசியமான செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. அரசியல் போட்டிகளில் வெற்றிக் காண்பீர்கள். 
 
சிலருக்கு முக்கிய பொறுப்புகள் தானே வந்து சேரும். எதை செய்தாலும் அதற்கு தகுந்தபடி நீங்கள் உங்களை மாற்றிக் கொண்டு செயல்பட்டு நற்பலன்களைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் அறிமுக வளர்ச்சி பெற்று அதன் மூலம் எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகள் நிறைந்திருக்கும். எதிலும் தேவையற்ற சில விடயங்களில் கனவமாக இருக்கவும். 
 
குறிப்பாக பெண்கள் விடயத்தில் அணுகுமுறையில் எச்சரிக்கையாய் இருப்பது மிகவும் நல்லது. பணிபுரியுமிடத்தில் உங்களின் சேவை பாராட்டப்படும். குறிப்பிட்ட சில வேலைகளில் கவனம் செலுத்தி அதன் மூலம் வருமானம் பெறும் வாய்ப்புகள் அமையும். பொன், பொருள்கள் சேர்க்கை அதிகரிக்கும். வாகன வசதிகளையும் பெருக்கிக் கொள்வீர்கள். அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடுகளுக்குச் சென்று வரும் வாய்ப்புகள் அடிக்கடி அமையும். பொருளாதார நிலை சீராக இருக்கும்.
 
பரிகாரம்:
 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வெற்றிலை மாலை சாற்றி, வெண்ணெய் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.