குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - மேஷம்

குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - மேஷம்

விரைவாக எதையும் செய்து முடிக்க வேண்டுமென்று நினைக்கும் மேஷ ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் குரு அமர்வது சிறப்பான பலனாக அமையும். மறைவு ஸ்தானத்தில் குரு பார்வை அமைவது. உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். லாப ஸ்தானத்தில் சனியுடன் ராசிநாதன் இணைவது போட்டிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த படி நல்ல வளம் பெறுவீர்கள். உங்களின் தேவைகளுக்கான வீட்டுப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு வீட்டுமனை வாங்கும் வாய்ப்புகள் அமையும். 
 
திருமணத் தடை நீங்கி பெண்களுக்கு திருமண வாய்ப்புகள். கைகூடும். விளையாட்டு துறையில் நீங்கள் சாதனைகளை செய்வீர்கள். பாதுகாப்பு துறையில் நல்ல சூழ்நிலைகள் உருவாகும். திடீர் இடமாற்றம் உண்டாகும்.  சிலருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் நீங்கி, மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். அதிகமான அலைச்சல்களைக் குறைத்துக் கொள்வீர்கள். கால நேரமின்றி உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.
 
மேலதிகாரிகளிடம் இணைக்கமான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வீர்கள். கலைத்துறையினர் தங்களின் மனம் போல் சில சூழ்நிலைகளை உருவாக்கி கொள்வீர்கள். உங்களின் திடமான நம்பிக்கையும், விடாபிடியான முயற்சியும் உங்களை பல கட்டத்தில் மேன்மை படச் செய்யும். சகோதர, சகோதரி உறவு பலப்படும். தாயார் வீட்டு சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும். பண புழக்கம் தாராளமாக இருக்கும். நண்பர்களின் சேர்க்கை மூலம் சிலர் புதிய தொழில் துவங்குவீர்கள்.

பரிகாரம்:
 
சனிக்கிழமைகளில் பைரவர் வழிபாடு தொடர்ந்து செய்து வருவது நல்லது. மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள கால காரியமும் அனுகூலமாக அமையும்.