2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - ரிஷபம்
தன்னை மதிப்பவர்களை மதிக்கும் குணம் கொண்ட ரிஷப ராசி வாசகர்களே!
இந்த வரும் 01-05-2024 அன்று இதுவரையில் விரைய குருவாக இருந்த குரு பகவான் ஜென்ம குருவாக வரவிருக்கிறார். பல்வேறு இழப்புகளிலிருந்து மீண்டு வளர்ச்சியை நோக்கி பயணம் செய்யும் வாய்ப்புகளைப் பெறுகிறீர்கள்.
ஜென்ம குருவாக அமரும் போது உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் களத்திர ஸ்தானத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும் பார்வை இடுவது அந்த இடம் பலம் பெறும் வழியை தேடி கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வழி கிடைக்கப் பெறுவீர்கள். குல தெய்வ வழிபாடுகள் செய்வதும், குல தெய்வம் தெரியாதவர்கள் கடைபிடிக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிட்டும். காதல் வெளிபடுத்தவும், காதலர் திருமணம் செய்து கொள்ளவும். இது சரியான காலமாக அமையும்.
எதிர்த்து பேசியவர்கள் அடங்கி போவார்கள். வெளிநாடு செல்லவும், வெளிநாட்டு தொடர்புகள் மூலம் தொழில் தொடர்புகளை உருவாக்கி கொள்ளவும் வாய்ப்புகள் அமையும். திருமண தடை நீங்கி நல்ல வரன் அமையும். கூட்டு தொழில் சிறப்பாக அமையும்.
நண்பர்களின் உதவியும், பொருளாதார ரீதியான ஒத்துழைப்பும் உங்களுக்கு உதவியை தரும். தீர்த்த யாத்திரை சென்று வருதல், ஆலய தரிசனம், குருவின் அருள் ஆசி பெறுதல், உயர் பதவியில் இருப்பவர்களின் சந்திப்பு மூலம் நட்பும், நன்மையும் உண்டாகும். உங்களின் லட்சியத்தில் ஒரு பகுதியை செயலில் காட்டி மேன்மைப் பெறுவீர்கள்.
உங்களுக்கு நட்பு வீடு என்பதால் பெரும்பாலும் நன்மையை தரும். புதிய தொழில் துவங்கும் சூழ்நிலைகளுக்கு தகுந்த ஏற்பாடுகளை செய்து கொள்வீர்கள். வங்கி கடன் பெறுதல், அதற்கு தேவையான ஆவணங்களை சரி செய்து கொள்வீர்கள். பொது வாழ்வில் உங்களுக்கு சென்று ஒரு இடத்தை தக்க வைத்து கொள்வீர்கள். பசியுடன் இருக்கும் ஏழைகளுக்கு உங்களால் முடிந்த தான தர்மம் செய்வீர்கள்.
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்கி மஞ்சள் நிற பூ வைத்து நெய் தீபமேற்றி வாங்கி வர நினைத்த காரியம் கைகூடும்.