2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - மகரம்

2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - மகரம்

வசதிகளை தேடி செல்லாமல், இயல்பாகவே வாழ நினைக்கும் மகர ராசி வாசகர்களே!
 
இந்த வருடம் 01-05-2024 முதல்.. இது வரை சுகஸ்தானத்தில் இருந்த குரு, இனி பஞ்சமஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதும், ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்வதும்.. சிறப்பான பலன்களாக அமையும்.
 
உங்களின் ராசிக்கு குரு பகவான் மறைவு ஸ்தானாதிபதி என்பதால், குரு பார்க்குமிடம் சிறப்பு.  உங்களின் பாக்கியஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்ப்பதுடன் உங்களின் ராசியை பார்ப்பதால் நற்பலன்கள் வந்து சேரும். உங்கள் ராசியை பார்ப்பதால், கடந்த கால தேக்க நிலைகள் மாறி நன்மைகள் உண்டாகும். பாக்கியஸ்தானத்தை பார்ப்பதால், தொழிலில் புதிய மாற்றங்களுடன் மேன்மை அடைவீர்கள். உத்தியோகத்தில் புதிய பதவிகளும், சலுகைகளும் பெறுவீர்கள்.
 
தனி திறமையுடன் பல சாதனைகளைச் செய்வீர்கள். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் வந்து செயல்பட வேண்டிவரும். நேர்மையான உங்களின் தன்மைக்கு.. எப்பொழுதும் நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். புனித யாத்திரை சென்று  வருதல், ஆன்மீக தொடர்புகள் மூலம் சிறப்பான வளர்ச்சியைப் பெற்று பொருளாதாரத்திலும் சிறந்து விளங்குவீர்கள்.
 
இனி லாபஸ்தானத்தின் பார்வையால் சிலருக்கு இழந்த செல்வம் மீட்டிக் கொள்ளவும், பெரிய கடன்களை குறைத்துக் கொள்ளவும். சுமையாக இருந்த வந்த காரியம் வளம் பெறவும், இனி நினைத்தது நடக்கும் காலமாக அமையும். மூத்த சகோதரர் மூலம் நன்மைகள் உண்டாகும். சிலருக்கு மறுமணம் செய்யும் வாய்ப்புகள் அமையும்.
 
எண்ணங்கள் நிறைவேறும். துணிச்சலுடன் எதையும் செய்து மேன்மை பெறுவீர்கள். தொழிற்சங்கத்தின் சில பொறுப்புகள் வந்து சேரும். இதன் மூலம் பலரின் வாழ்வில் ஒளி வீசும்படியான பல நல்ல காரியங்களை நடத்தித் தருவீர்கள். உங்களை ஏமாற்றியவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள்.
 
பரிகாரம்:
 
வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்திக்கு மூன்று நெய் தீபமிட்டு, கொண்டைகடலை மாலை போட்டு, எலுமிச்சை சாதத்தை  நைவேத்தியமாக படைத்து, வேண்டிக் கொள்ள சகல நலன்களும் உண்டாகும்.