2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - கும்பம்

2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - கும்பம்

காரியத்தை செயல்படுத்தில் கவனம் செலுத்தும் கும்ப ராசி வாசகர்களே!
 
இந்த வருடம் 01-05-2024 முதல் இதுவரை மூன்றாமிடத்தில் இருந்து குரு பகவான் இனி சுகஸ்தானத்தில் அமர்வதும், உங்களின் மறைவு ஸ்தானத்தை பார்ப்பதும் தடைகள் நீங்கி, சுபிட்சம் பெற நல்ல வாய்ப்புகள் அமையும்.
 
இந்த குரு பெயர்ச்சி மூலம், இதுவரை குரு பார்வை பெற்ற இடங்களில் சிறப்பு பெற்ற நீங்கள்.. இனி உங்களின் மறைவு ஸ்தானமான அட்டமஸ்தானத்தை பார்ப்பதன் மூலம், தடைபட்ட பல காரியங்கள் நடைபெற துவங்கும். குடும்பத்தில் இருந்த சண்டைச் சரவுகள் நீங்கி, சுகமாக இருக்க குரு உதவி செய்வார். நீண்ட காலம் நீடித்து வந்த வழக்குகள்... நல்ல முடிவை எட்டும்.
 
உங்களை ஏசியவர்கள் உங்களின் உறவுக்காக எதிர்நோக்கி இருப்பார்கள். குரு உங்களின் தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழில் இல்லாமல் இருந்தவருக்கு நல்ல தொழிலை ஏற்படுத்திக் கொடுப்பார். வேலை தேடுபவருக்கு நல்ல வேலை கிடைக்க உதவி செய்வார். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவருக்கு நல்ல வேலையும் விரைவில் விசாவும் கிடைக்க வழி உண்டாகும்.
 
வெளிநாடுகளில் வேலை செய்பவருக்கு கூடுதல் ஊதியம் கிடைக்கவும். வேறு நிறுவனத்தில் கூடுதல் சம்பளமும் கிடைக்கும் வாய்ப்புகளும் அமையும். உங்களின் ராசிநாதனின் மூலம் உங்களின் எதிர்கால நலன் சிறப்பாக அமையும். கொடுத்த இடத்தில் பணம் திரும்ப கிடைக்க, நீங்கள் எடுக்கும் முயற்சிகள் விரைவில் நிறைவேறும்.
 
அரசியலிலும், பொது வாழ்வில் உங்களின் செல்வாக்கு உயரும். கலைதுறையினருக்கு நல்ல நிறுவனத்தின் மூலம் ஒப்பந்தங்கள் அமைய பெறுவீர்கள். புதிய கடன் மூலம் பழைய கடன்களை நீக்கி நிம்மதி பெறுவீர்கள். பொருளாதாரத்தில் சீரான நடைமுறைகள் தொடர்ந்து இருக்கும்.

பரிகாரம்:
 
வியாழக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் அல்லது காலை 06.00 - 07.00-க்குள் நவகிரக குருவுக்கு நெய் தீபமிட்டு மஞ்சள் அர்ச்சனை செய்து வர வருடம் முழுவதும் நற்பலன்களை பெறுவீர்கள்.