சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - சிம்மம்

தைரியத்துடனும், மனவலிமையுடனும் எதையும் சாதித்து காட்டும் சிம்ம ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு சாதகமாக எல்லா கிரகங்களும் அமைவதும். புத்தாண்டு துவங்கியதும் குரு பார்வை பெறுவதும், உங்களின் ராசியை குரு பார்வை இடுவது சிறப்பான நற்பலன்களை பெற்று தரும். எதையும் முன்கூட்டியே யோசித்து செயல்பட்டு திறமையுடன் காரியத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.
கலைத்துறையினர் செல்வாக்கு பெற்று மக்கள் மத்தியில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாராகடன் வசூல் ஆகும். முன்னே விட்டு பின்னால் பேசியவர்கள். உங்களின் தயவை வேண்டி வருவார்கள். எதிலும் பிறரின் ஆலோசனைகளை ஏற்காமல் உங்களின் முடிவுக்கு செயல்படுவீர்கள். வங்கி மூலம் கடன் பெறுவதும், தொழிலில் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவதும், உங்களின் தனித் திறமையை வளர்த்துக் கொள்ள பயன்படும்.
உங்களுக்கு கண்டக சனி நடப்பதால் கூட்டுத் தொழிலில் வரவு செலவுகளை அடிக்கடி சரிபார்த்துக் கொள்வது நல்லது. பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவதும், மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்கி கொள்வதும் நல்லது. வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். உங்களின் வேலை சார்ந்த பயணம், தொழில் சார்ந்த பயணம் சிறப்பாக அமையும். எதையும் சுறுசுறுப்பாக செய்ய வேண்டுமென்று நினைப்பீர்கள். முக்கிய பணிகளில் அதிகம் நாம் உழைக்க வேண்டிவரும்.
உங்களின் ராசிநாதன் சூரியன் இருக்குமிடத்தை வைத்து சில நேரம் நற்பலன்கள் வந்து சேரும். எதையும் அலட்சியம் செய்யாமல் உணர்ந்து செயல்படுவது உங்களின் எதிர்கால நலனுக்கு நல்லது. அரசியல் ஈடுபாடுகளில் உங்களின் பலம் உயரும். கணித்தபடி சிலருக்கு புதிய பதவிகளும், செல்வாக்கும் உண்டாகும். கூட்டுத் தொழில் சிலருக்கு பாதிப்பை தரும். சுய ஜாதகத்தில் தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் இருப்பதை பொறுத்து நற்பலன் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்கள்:
1, 3, 9.
இந்த ஆண்டு நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணிக்கு தவறாமல் வைரவர் வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு தயிர் அன்னம் வைத்து தொடர்ந்து வேண்டிவர சனி தோசம் நீங்கி நற்பலன் பெறுவீர்கள்.