2023 - 2024 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - தனுசு

2023 - 2024 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - தனுசு

துணிச்சலுடன் எதையும் சாதித்து காட்டி செயல்படும் தனுசு ராசி வாசகர்களே!
 
இந்த குரு பெயர்ச்சிக்கு முன்பு வரை உங்களின் மறைவு ஸ்தானங்களை பார்த்து வந்த குரு இனிவரும் 22.04.2023 அன்று இரவு முதல் உங்களின் ராசியை பார்க்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் யோகாதிபதி வீட்டையும். லாபஸ்தானத்தையும் பார்ப்பது உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நல்ல காரியங்களை தள்ளி போடாமல் விரைவில் செயல்படுத்த துவங்குவீர்கள்.

சரியாக பாதையை தெரிவு செய்து உங்களின் எதிர்காலத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவு மறையும். எதிர்ப்புகள் குறையும். இனி உங்களின் வாழ்க்கையில் சுபிட்சமான சூழ்நிலை உருவாகும். கடந்த கால கடன் பிரச்சனை, வழக்குகள் எல்லாம் விரைவில் தீர்வாகி, விடுதலை பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அதிக படியான உங்களின் பணிச் சுமை, குறைந்து நன்மை அடைவீர்கள். தங்க நகை அடவு மீண்டு நல்ல நிலைக்கு வருவீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உங்களின் வாழ்க்கை சூழ்நிலை மாற்றி அமைக்கும்.

படித்தவர்களுக்கு தகுநியான வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். வரவுக்குள் செலவுகளை சுருக்கி கொள்வீர்கள். புத்திரர்களின் படிப்பு விடயத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாவதுடன், நல்ல பாடசாலையில் இடம் கிடைத்து வளம் பெறுவார்கள்.

சொந்த வீடு கனவு விரைவில் உங்களின் முயற்சிக்கு நற்பலன் உண்டாகும். வங்கி மூலம் சிலர் கடன் பெறுவதும், அதன் மூலம் தொழிலை மேம்படுத்தி கொள்ளும் வாய்ப்பும் அமையும். பொருளாதாரம் சிறக்கும்.
 
பரிகாரம்:
 
வியாழக்கிழமைகளில் மஞ்சள் பொடி தூவி குருவுக்கு (நவகிரக) ஐந்து நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்ள, உங்களின் அனைத்து விருப்பமும் முழுமையாக நிறைவேறும்.