2022 - ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் - மகரம்

2022 - ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் - மகரம்

சிந்தனையை சிதற விடாமல் செயல்படுத்தும் மகர ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ஜென்ம சனியும், தனஸ்தானத்தில் குருவும் ஆரம்பத்தில் அமர்வது உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும். தொழிலில் சிலருக்கு கடந்த காலத்தில் சரியாக அமையபெறாமலும். எதிர்கால பயமும் உங்களுக்கு இருந்து வந்த நிலைமாறி நன்மையான பலன்களே பெறுவீர்கள். பொருளாதார பிரச்சனை, உடல்நல குறைபாடு, எதிரி தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். சின்ன விடயத்தை கூட யோசித்து செய்து வந்த நீங்கள், இனி பெரிய விடயத்தை கூடயோசிக்காமல் செய்ய துணிவீர்கள். அரசியலில் மக்களின் செல்வாக்கை மீண்டும் பெற்று, சிறந்த மாற்றத்தை உருவாக்குவீர்கள். பதவியை இழந்த வர்களுக்கு மீண்டும் பதவி கிடைக்கப் பெறுவீர்கள். காலத்தை நிர்ணயித்து உங்களின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும். வசதிகளை பெருக்கி கொள்வீர்கள். பிறருக்கு உதவிகள் செய்வதை மிகவும் விரும்பி செய்வீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
அரசாங்க காரியங்களை தவிர்ப்பது நல்லது வீண் அலைச்சலில் முடியும். பாதுகாப்பான பண பரிவர்த்தனை செய்து கொள்வது நல்லது. மருத்துவமனை செல்வதை தவிர்க்கவும்.
 
நட்சத்திர பலன்கள்:
 
உத்திராடம் 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
உங்களின் கவனம் சிதறாமல் செயல்படுவதுடன் எதை முதலில் முடிக்க வேண்டுமோ அதனை செய்து முடிப்பீர்கள் அரசியலில் உங்களின் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
 
திருவோணம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
பொது விடயத்தில் எதை செய்தாலும் உங்களுக்கு நன்மையே உண்டாகும். பேசி தீர்க்கும் பிரச்சனைகளை முடித்து வைப்பீர்கள். தொழிலில் முன்னைவிட முன்னேற்றம் இருக்கும்.
 
அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள்:
 
அவசரமின்றி யெல்படுவது நல்லது. விளையாட்டு துறையில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்களை தேடி பதவிகள் வரும். எதையும் சாதரணமாக எடுத்துக் கொள்வீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், மஞ்சள், வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.
 
அதிர்ஷ்ட திகதிகள்: 3, 6, 8.
 
இந்தாண்டு முழுவதும் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
சனி, ஞாயிறு கிழமைகளில் ராகு காலத்தில் ஆஞ்சநேயர் தரிசனம் செய்து வெற்றிலை மாலையும், பைரவர் வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபமும் ஏற்றி வழிபட அனைத்து காரியமும் சாதகமாக அமையும்.