2022 - ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் - கன்னி

2022 - ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் - கன்னி

குழந்தை உள்ளத்துடன் அனைவரிடமும் பழகும் கன்னி ராசி  வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு மறைவு ஸ்தானங்களை குரு பார்ப்பதும், ராசியை குரு பார்ப்பதும், பஞ்சம ஸ்தானத்தினை சனி ஆரம்பத்திலும் பிற்பகுதியில் சத்ரு ஸ்தானத்தில் யோக சனியாக வருவதும் உங்களின் வாழ்க்கையின் நல்ல மாற்றம் உண்டாகும். ராகு / கேது பெயர்ச்சி நாகதோசத்தை உண்டு பண்ணிணாலும் உங்களின் வாழ்வில் செழிப்பும் உண்டாகும். உங்களின் யோகாதிபதிகளான சுக்கிரனும், சனியும் பல நன்மைகளை உங்களுக்கு வழங்கி வருவார்கள். பல ஆண்டுகளாக இழந்து வந்த பண இழப்புகளை சரிசெய்து வளம் பெறுவீர்கள். எத்தனையோ ஏமாற்றங்களை சந்தித்து வந்த உங்களின் வாழ்வில் ஏற்றம் பெறும் நல்வாழ்வு கிட்டும். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவதுடன் திட்டமிட்ட செயல்கள் மூலம் அனைத்தையும் பெறுவீர்கள். யாரையும் நம்பி இருக்கமாட்டீர்கள். தீர்மானிக்கும் செயல்களை தாமதமின்றி செயல்படுத்துவீர்கள். தொழிலிலும், உத்தியோகத்திலும் எதையும் அடையும் இலக்கை நிர்ணயித்து வெற்றி காண்பீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
சொந்த காரணங்களால் சிலருக்கு வீண் அலைச்சல் உண்டாகும். ஞாபக மறதி, புதிய செலவுகள் வந்து உங்களுக்கு மனஉளைச்சலை தந்து வருந்தும் நிலை வருவதைத் தவிர்க்கவும்.
 
நட்சத்திர பலன்கள்:
 
உத்திரம் 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
அரசியலும், அரசு பணியிலும் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழில் செய்பவருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிறிய தொகையில் அதிக லாபம் பெறுவீர்கள்.
 
ஹஸ்தம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
இழந்த செல்வத்தை மீட்பதற்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வீர்கள். குடும்ப நன்மைக்காக நீங்கள் செய்யும் சில காரியம் நன்மையாக அமையும். வேலை வாய்ப்பு கிட்டும்.
 
சித்திரை 1, 2 ஆம் பாதங்கள்:
 
விவசாயம், அன்றாட விளைபொருட்கள் மூலம் சிறந்த வளர்ச்சியை பெறுவீர்கள். சகோதரரின் மூலம் சிலருக்கு ஆதாயம் உண்டாகும். தொழிலில் நல்ல வளர்ச்சியையும், வளம் பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள், நீலம்.
 
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென் மேற்கு, மேற்கு.
 
அதிர்ஷ்ட திகதிகள்: 3, 5, 8.

இந்தாண்டு முழுவதும் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு கிழமைகளில் ராகு காலத்தில் நவகிரக வழிபாடும். வெள்ளிக்கிழமை அம்மனுக்கு குங்கும அர்ச்சனையும் செய்து வருவதன் மூலம் அனைத்து வளங்களையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும்.