2022 - ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் - தனுசு

2022 - ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் - தனுசு

தன்னம்பிக்கையுடன் ஒவ்வொரு செயலையும் செய்து வரும் தனுசு ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு தன காரகன் சனி தனஸ்தானத்திலும், குரு உங்களின் ராசிநாதனாக இருந்தாலும் மூன்றில் அமர்ந்து பார்க்குமிடம் சிறப்பையும் பெறும் ராசியாக உங்களுக்கு ஆரம்ப காலத்தில் அமைவது சிறப்பான பலனைத் தரும். ராகு / கேது பெயர்ச்சியாகி, மார்ச் மாதத்தில் ராகு பஞ்சம ஸ்தானத்திலும், கேது லாபஸ்தானத்திலும் அமர்வது உங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு நன்மையைத் தரும். எதிலும் முன்கூட்டியே செயல்படும் திறமை இருந்த போதிலும் உங்களின் தொடர் செயல்பாடுகளில் சில நேரம் தாமதத்தால் தடைபடும். இருந்தாலும் நீண்ட கால கடன் தொல்லையும், உடல்நல குறைவும் நீங்கி வளம் பெறுவீர்கள். தொழிலில் போட்டிகளிலிருந்து விடு பட்டு நன்மையை பெறுவீர்கள். சரியான கூட்டு முயற்சிகளுக்கு நல்ல பலனை பெறுவீர்கள். முக்கிய காரியங்களில் உங்களின் செயல்பாடுகளில் வெற்றியை பெறுவீர்கள். அரசியலிலும், ஆன்மீகத்திலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவி உறவு செல்வாக்குகளுக்கு தடையின்றி வளம் பெறுவீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தியானம், மௌனம் போன்றவற்றை கடைபிடிப்பது நல்லது பணபுழக்கத்தில் சற்று கவனம் செலுத்தி அவசரமின்றி செயல்படுவது நன்மையை தரும்.
 
நட்சத்திர பலன்கள்:

மூலம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
குடும்ப சுமைகள் குறையும். தேவைகளுக்கு ஏற்ற நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள். தொழிலில் போட்டியின்றி நன்மை பெறுவீர்கள். சுறுசுறுப்புடன் செயல்பட்டு வளம் பெறுவீர்கள்.
 
பூராடம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
கருத்து வேறுபாடுகள் கலைந்து நன்மை பெறுவீர்கள். பிரிந்து உறவுகள் இணையும். கலை துறையினருக்கு முன்னேற்றம் உண்டாகும். வெளிநாடு பயணம் சிலருக்கு அமையும்.
 
உத்திராடம் 1ம் பாதம்:
 
சொன்னபடி நடக்க வேண்டுமென்று யோசித்தும் செயல்படுவீர்கள். அரசியலிலும், உத்தியோகத்திலும் திறம்பட செயல்படுவீர்கள். தேவைகளுக்கு பொருளாதாரம் இருக்கும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பல வர்ணம், சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, தென்மேற்கு.
 
அதிர்ஷ்ட திகதிகள்: 1, 3, 7
 
இந்தாண்டு முழுவதும் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியரையும், சனிக்கிழமை சனீஸ்வரரரையும் தொடர்ந்து வணங்கி வர உங்களின் அனைத்து விடயங்களும் சிறப்பாக இயங்கும். கடன், நோய், அலைச்சல் குறைத்து சுபிட்சம் பெறுவீர்கள்.