ராகு - கேது பெயர்ச்சி 2023 முதல் 2025 வரை - விருச்சிகம்

தனித் திறமை கொண்டு விளங்கும் விருச்சிக ராசி வாசகர்களே!
 
இந்த ராகு - கேது பெயர்ச்சி வரும் 08.10.2023 முதல் ஒன்றரை ஆண்டு காலம் உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் கேதுவும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகுவும் அமர்ந்த பலனளிக்கிறார்கள். 
 
ஏற்கனவே உங்களுக்கு அர்த்தாஷ்டம சனியுடன், குரு பார்வை இல்லாத நிலையில் ராகு ஐந்தாமிடத்தில் அமர்வது... உங்கள் ராசிக்கு கெடுபலன்களை தந்தாலும் கூட, உங்களின் ராசிநாதனின் பலம் உங்களை ஊக்கப்படுத்தும் செவ்வாய் பலம் பெற்ற ஜாதகர்கள் எதற்கு அஞ்ச வேண்டியதில்லை.
 
மனவலிமையுடன் செயல்பட்டு காரியத்தை தடையின்றி செயல்படுத்துவீர்கள். சொந்த முயற்சிகளால் பல காரியங்களை சரியாக செய்வீர்கள். காவல், ராணுவம், ஊழியராக பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அதிகார தொல்லை இருக்கும்.
 
இந்த காலக்கட்டத்தில் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல் மாறல் போன்ற பாடல்களை கேட்பது, படிப்பது மூலம் உங்களின் சகல பிரச்சனைகளும் சரியாகும். உங்களுக்கு ஆதரவாக கேது லாபஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பது, தேவைகளுக்கு தகுந்தபடி பொருளாதார வளம் கிடைக்கப் பெறுவீர்கள்.
 
எதையும் விரும்பி செய்தால் வளம் பெறுவீர்கள். குடும்பத்தில் எப்பொழுதும் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மன அமைதி கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் கூடுதல் முதலீடு இன்றி, கூட்டுத் தொழில் தவிர்த்து, தனித்து செயல்படுவதன் மூலம் வளம் பெறுவீர்கள்.
 
அவசர முடிவுகளை எடுக்காமல் நிதானமாக யோசித்து செயல்படுவதன் மூலம் நற்பலனை பெறுவீர்கள். தேவைகளுக்கு ஏற்ப நன்மை கிடைக்கும்.
 
பரிகாரம்:
 
வைரவர் வழிபாடு சனிக்கிழமைகளிலும், சுப்ரமணியர் வழிபாடு, செவ்வாய் கிழமைகளிலும், தட்சிணாமூர்த்தி வழிபாடு, வியாழக் கிழமைகளிலும் தொடர்ந்து வேண்டிக் கொள்ள நன்மையைப் பெறுவீர்கள்.