ராகு - கேது பெயர்ச்சி 2023 முதல் 2025 வரை - கடகம்

சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் கடக ராசி வாசகர்களே!
 
இந்த ராகு - கேது பெயர்ச்சி வரும் 08.10.2023 முதல் ஒன்றரை ஆண்டு காலம் வளமாக வாழ்வதற்கு உரிய பலன்களை தருவார்கள். அட்டம சனி தாக்கம் உங்களுக்கு குறைத்து கொள்ள ராகு - கேது பக்க பலமாக அமைவார்கள். உங்களின் முயற்சி ஸ்தானத்தில் கேது அமர்ந்து ராசியை பார்ப்பது... விடாமுயற்சிகளால் சகல காரியத்தையும் வெற்றி கொள்ள, முன்னேற்றம் உண்டாகும்.
 
காரியத்தில் கவனம் செலுத்தி உறுதியுடன் செயல்பட்டு மேன்மை அடைவீர்கள். பேச்சிலும், செயலிலும் தேவையான வளர்ச்சியை அடைவீர்கள். திடீர் வேலை வாய்ப்பும், பொருளாதாரத்தில் மேன்மையும் உண்டாகும்.
 
உங்களின் தனிபட்ட திறமையை வளர்த்து கொள்ள உதவி கிடைக்கும். அரசியலிலும் சில தடைகள் வந்தாலும் நல்ல உறுதியான செயல்பாடுகளால் முன்னேற்றம் உண்டாகும். பாக்கியஸ்தானத்தில் ராகு அமர்வது தொழிலில் நல்ல வாடிக்கையாளர்களை பெறுவது.... கவர்ச்சி கரமாக பேசி வளம் பெற செய்வது... போன்றவற்றில் திறமை உண்டாகும். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். 
 
தெய்வ வழிபாடுகளும், தீர்த்த யாத்திரை சென்று வருவதும், தெளிந்த மனநிலையில் செயல்படுவதும், உங்களின் முயற்சி வெற்றியை தருவதுடன்.
இதுவரை வராமல் இருந்த தொகை வரவழைக்கும் வாய்ப்பும் கிடைக்க பெறுவீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் தடைகள் நீங்கி, உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். தன்னலமில்லாத உங்களின் சேவைக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும்.
 
கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். மேலதிகாரிகளின் அரவணப்பு உங்களை ஊக்கபடுத்தும். உழைப்பு ஒன்றின் மூலம் நல்ல நிலைக்கு வருவீர்கள்.
 
பரிகாரம்:
 
செவ்வாய்கிழமைகளில் பைரவர் வழிபாடு செய்து, நல்லெண்ணெய் தீபமிட்டு அரளி பூ மாலை போட்டு தேசிகாய் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் அனுகூலமாக அமையும்.