2022 - 2023 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

எண்ணத்தை செயலாக்க நினைத்து செயல்படும் கும்ப ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு சுகஸ்தானத்திலும் தொழில் ஸ்தானத்திலும் அமர்ந்த ராகு / கேது, இனி வரும் 21.03.2022 முதல் உங்களின் ராசிக்கு முயற்சி ஸ்தானத்தில் ராகுவும், பாக்கிய ஸ்தானத்தில் கேதுவும் அமர்வது சிறப்பான பலனாக அமையும்.
 
எந்த ஒரு கிரகமும் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்தால் கெடுபலன்களை தராது என்பதால் முன்றில் ராகு யோகத்தையும், பாக்கிய ஸ்தான கேது நல்ல பலனையும் பெற்று தருவார்கள். முயற்சிக்கு முழு ஆதரவையும் தரும் ராகு உங்களை பல வழிகளில் ஊக்கபடுத்துவார் சொல்லின் மேன்மையும், எழுத்தில் ஆர்வமும் கொண்டு விளங்குவீர்கள். பொது வாழ்வில் உங்களுக்கு சமூக அந்தஸ்தை பெற்று தரும் ராகு காலத்தையும், நேரத்தையும் சாதகமாக அமைத்து தருவார். கேது புண்ணிய தீர்த்தம் ஆடுதல் ஆன்மீக தேடலில் விடியலை பெற்று தருவார். சரியான நேரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு நன்மையை பெற்றுத் தரும். வருமானம் தேவைகளை நிறைவு செய்யும் ஆதிக்கம் செலுத்தியவர்களை ஓரம் கட்டும் நிலை உருவாகும். உங்களுக்கென செல்வாக்கு உயரும். பொருளாதார வளர்ச்சியை பெறுவீர்கள். 
 
இனி ராகு சூரியன் நட்சத்திரத்திலிருக்கும் காலம் அரசியலில் வளம் பெறுவீர்கள். உங்களுக்கென்று மக்களின் செல்வாக்கு பெருகும். உங்களின் முயற்சி வெற்றியை தரும். சுக்கிரன் நட்சத்திரத்தில் இருக்கும் காலம் மனைவி மூலம் சிலருக்கு ஆதாயம் கிட்டும். கணவன் மனைவி உறவு பலப்படும். எதையும் மகிழ்ச்சியுடன் உணர்ந்து செயல்படுவீர்கள். கேது நட்சத்திரத்திலிருக்கும் போது போட்டியாளர்களிடமிருந்து வெளியேற உங்களுக்கு பலவழிகளில் நன்மையும் மேன்மையும் பெறுவதும், தொழிலில் மேன்மையும் பெறுவீர்கள். 
 
இனி கேது பாக்கியஸ்தானத்தில் அமர்வது புனித யாத்திரை சென்று வருதல். குழந்தை பாக்கியம், திருமண தடைகளிலிருந்து விடுபட்டு நன்மை பெறுவீர்கள். குரு நட்சத்திரத்தில் கேது அமரும் காலம் இதுவரை தொழில் அமையாதவருக்கு தொழில் அமையும். வருமானம் அதிகரிக்கும் ராகு நட்சத்திரத்தில் கேது அமர்வதால் சில சங்கடங்கள் வந்தாலும் கூட நன்மைகள் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலை பெறுவீர்கள். மறைமுக உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். செவ்வாய் நட்சத்திரத்தில் கேது அமரும் போது சிரமங்கள் தீர்ந்து நன்மை பெறுவீர்கள்.உங்களின் திறனை மேம்படுத்தி கொள்வீர்கள்.
 
பரிகாரம்: 
 
ஞாயிறு அன்று ராகு காலத்தில் பைரவர் வழிபாடும். சுப்ரமணியர் வழிபாடு செய்து தீபமேற்றி வேண்டிக் கொள்ள எல்லாம் நிறைவாகவும் சாதனைகளை செய்யும் வாய்ப்பையும் பெறுவீர்கள்.

R.ஆனந்தன்
கணித்தவர் - வாடிப்பட்டி
+91-9789341554