2021 - 2022 குரு பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

வலிமையான மனம் கொண்டு விளங்கும் மேஷ ராசி வாசகர்களே!

இந்த குரு பெயர்ச்சி வரும் 13.11.2021 முதல் உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் குரு அமர்ந்து மூன்றாமிடம், ஐந்தாமிடம், ஏழாமிடத்தை குரு பார்ப்பதும் உங்களின் ஆத்ம பலம், மன வலிமை, வளம் உண்டாகும். சிறந்த ஆராய்ச்சி வல்லுநர் களாக செயல்படுவீர்கள். கருத்து வேறுபாடு களிலிருந்து விடுபடுவீர்கள்.

உங்களின் தொழில் ஸ்தானாதிபதியுடன் இதுவரை இணைந்திருந்த குரு லாபஸ்தானத்தில் தனித்து அமர்வதும் உங்களின் தொழில் வளம் பெற நல்ல சந்தர்ப்பம் அமையும். திட்டமிட்ட செயல்கள் செயல்படதுவங்கும். எதையும் செய்து முடித்தபின்பு தான் அடுத்த நிலையை பற்றி யோசிப்பீர்கள். உங்களின் பூர்வ புண்ணியஸ்தானத்தை பார்ப்பது உங்களின் லட்சியத்தை அடைய இதுவரை இருந்த தடைகள் மறையும். குடும்ப வளர்ச்சிக்கு நல்ல உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். சரியான முடிவு எடுப்பீர்கள். உங்களின் களத்திரஸ்தானத்தை குரு பார்ப்பது, திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். நல்ல வரன் அமையும். சிலருக்கு காதல் செய்தவரே வரனாக அமையும் வாய்ப்பு கிட்டும். 

13.04.2022 முதல்  முதல் ஐந்து மாதம் குரு அதிசாரமாக விரைய ஸ்தானத்தில் அமர்வது பொருளாதார தடை, எதிர்பாராத செலவுகள் வந்து, உங்களுக்கு நெருக்கடியை தந்து பண பிரச்சனை உண்டாகும். திடமான நம்பிக்கையும் தொழில் மேலுள்ள பக்தியும் உங்களுக்கு பக்க பலமாக அமையும். இந்த குரு பெயர்ச்சியால் உங்களுக்கு எந்த குறையும் இன்றி வளம் பெறுவீர்கள். வக்கிர குரு உங்களுக்கு சில நன்மையும்.  தீமையும் தந்தாலும் பெரும்பாலும் நல்ல பலன்களே உங்களுக்கு இருக்கும் என்பதால் குரு பகவான் வழிபாடு அடிக்கடி செய்து கொள்வது நல்லது.

பரிகாரம்:

குரு அதிசாரம் பெறும் காலம் 13.04.2022 முதல் ஐந்து மாத காலம் நவகிரக குருவுக்கு வியாழக்கிழமைகளில் தொடர்ந்து வழிபாடு செய்து வருவது நல்லது நெய் தீபம் மூன்று ஏற்றி வணங்கி கொள்ளவும்.