16.06.2021 முதல் 30.06.2021 வரை

16.06.2021 முதல் 30.06.2021 வரை

மேஷம்
திடமான நம்பிக்கை கொண்டு விளங்குவீர்கள். சரியான பணியை தேர்வு செய்து சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் முன்னேற்றமும் வருமானமும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண் - 1, 3, 8.
பரிகாரம் - செவ்வாய், வெள்ளிகிழமைகளில் அம்மன் வழிபாடும் விளக்கு ஏற்றி வேண்டிக் கொள்ள பொருளாதாரம் சிறக்கும்.
 
ரிஷபம்
நிலையான தொழிலை செய்து வளம் பெறுவீர்கள். கிடைத்த நல் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள். அரசியலில் பிரபலமாகும் வாய்ப்பு அமையும்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, ஆரஞ்சு, சிவப்பு.
அதிர்ஷ்ட எண் - 1, 6, 9.
பரிகாரம் - செவ்வாய்கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு நிற பூ வைத்து தீபம் ஏற்றி வர சகல காரியமும் சித்தியாகும்.
 
மிதுனம்
சொந்த விடயங்களில் கவனமாக செயல்படுவீர்கள். பாதியில் நின்ற காரியம் செயல்பட துவங்கும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி பாராட்டு பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - பச்சை, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட எண் - 3, 5, 8.
பரிகாரம்  - செவ்வாய்கிழமை கோதுமை மாவில் செய்து பல காரம் அம்மனுக்கும், சிவனுக்கு வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றி கிட்டும்.
 
கடகம்
சரியான நேரத்தில் கவனமுடன் செயல்படுவதும் நண்பரின் உதவியால் நினைத்த காரியமும் கைகூடும். தொழிலில் நினைத்த படி வளர்ச்சியை பெற்று வருமானமும் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, நீலம், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 9.
பரிகாரம் - சனிக்கிழமை பைரவர் வழிபாடு செய்து தீபம் ஏற்றி வணங்கி வர தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
 
சிம்மம்
செய்யும் தொழிலை மதித்து நடப்பீர்கள். எதையும் திடமாக செயல்படுத்தி வருமானத்தை பெருக்கி கொள்வீர்கள். புதிய திட்டங்கள் படிப்படியாக செயல்பட துவங்கும்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 1, 2, 3.
பரிகாரம் - வியாழக்கிழமைகளில் விநாயகர் வழிபாடு செய்து அரிசி மாவில் நைவேத்தியும் வைத்து வேண்டிக் கொள்ள எல்லாம் வெற்றி உண்டாகம்.
 
கன்னி
கருத்துகளை வெளிபடுத்துவதில் தயங்கமாட்டீர்கள். எதிலும் உங்களின் வளர்ச்சி மிகைபடும்படி இருக்கும். குறைந்த முதலீடுகளில் நல்ல லாபம் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - பச்சை, ஆரஞ்சு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 3, 5, 9.
பரிகாரம் - ஞாயிற்று கிழமைகைளில் ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து தீபமிட்டு வேணடிக் கொள்ள எல்லாம் சிறப்பாக அமையும்.
 
துலாம்
சிறுவிடயத்தை கூட கவனமுடள் செயல்படுத்தும் நீங்கள் சில நேரம் தடுமாற்றம் அடைவீர்கள். உங்களின் திறமையால் எந்த காரியத்தையும் தெளிவாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, நீலம், மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 3, 6, 8.
பரிகாரம் - வெள்ளிக்கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு நிற பூ வைத்து துவரை சாதம் வைத்து வேண்டிக் கொள்ள எல்லாம் நன்மையாக அமையும்.
 
விருச்சிகம்
விருந்தினர்கள் வருகை உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். நினைத்த காரியத்தை விரைவில் முடித்து வெற்றி கொண்டீர்கள். தொழிலிலும் பொது வாழ்விலும் ஏற்றும் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 8.
பரிகாரம் - வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடும், சனிச்சிழமை பைரவர் வழிபாடு செய்து வர தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
 
தனுசு
தன் செயலைகூட விரைவாக செய்து முடிக்க முடியாமல் சிரமும் கொண்டிருந்தாலும் உரிய நேரத்தில் முடித்து விடுவீர்கள். தொழிலிலும், பணியிலும் உங்களின் முயற்சி நன்மையை தரும்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், சிவப்பு, வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 1, 2, 3.
பரிகாரம் - வெள்ளிக்கிழமை நாகதேவதையை வணங்கி நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.
 
மகரம்
மனதில் நினைத்ததை செயல்படுத்தி காட்டும் சிறந்த பணியை செய்வீர்கள். பணியில் உங்களின் அர்பணிப்பு மிகவும் பாராட்டுமு்படி அமையும் எதிலும் வளர்ச்சியை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - நீலம், மஞ்சள், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 3, 8, 9.
பரிகாரம் - ஞாயிறு மாலை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து 5 நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள எல்லாம் வளமாக அமையும்.
 
கும்பம்
சிறுதொழில் செய்பவர்களுக்கு வருமானம் பெருகும் உங்களின் முக்கிய காரியங்கள் நல்ல பலனை பெற்று தரும். அரசியலில் வரவேற்பும், வளர்ச்சியும் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - நீலம், மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 8.
பரிகாரம் - செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியருக்கு நெய் தீபமிட்டு மிளகு சாதம் வைத்து வேண்டிக் கொள்ள எல்லாம் நன்மையாக அமையும்.
 
மீனம்
தனி கவன் செலுத்தி உங்களின் தொழிலில் அக்கறையுடன் செயல்படுவீர்கள். காலத்திற்கு தகுந்த மாற்றம் உண்டாக்கி தொழிலில் வளம் பெற்று விளங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், வெண்மை, நீலம்.
அதிர்ஷ்ட எண் - 3, 6, 8.
பரிகாரம் - சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வெற்றிலை மாலை போட்டு வேண்டிக் கொள்ள உங்களின் அனைத்து காரியமும் வெற்றி கிட்டும்.

கணித்தவர் அருள்வாக்கு ஜோதிடர்
வாடிபட்டி R.ஆனந்தன்
செல் - 91-9789341554