16-04-2021 முதல் 30-04-2021 வரை

16-04-2021 முதல் 30-04-2021 வரை

மேஷம்
 
மனதில் துணிச்சலே உங்களின் இலக்குக்கு சரியான வழியாக அமையும். புதிய நண்பர்களின் சந்திப்பு உங்களின் வெற்றிக்கு நல்ல பலனையும், பொருளாதாரத்தையும் தரும்..
 
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 9.
பரிகாரம் - வெள்ளிக்கிழமை சிவன் ஆலயத்திலுள்ள அம்மனுக்கு நெய் தீபமிட்டு கல்கண்டு சாதம் நைவேத்தியம் செய்ய நன்மை உண்டாகும்.
 
ரிஷபம்
 
குறைந்த முதலீடுகளில் தொழில் துவங்க வாய்ப்புகள் அமையும். உங்களின் கடன் பெற தடை நீங்கி விரைவில் கடன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கி வளம் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, ஆரஞ்சு, பலவர்ணம்.
அதிர்ஷ்ட எண் - 2, 7, 9.
பரிகாரம் - சனிக்கிழமை நவகிரக வழிபாடு செய்து, மூன்று தீபம் நல்லெண்ணெய் விட்டு வணங்கி வர தடையின்றி வெற்றி பெறுவீர்கள்.
 
மிதுனம்
 
உங்களின் அத்தியாவசியமான காரியங்களை தள்ளி போடாமல் உடனுக்கன் செய்து முடிப்பீர்கள். தொழிலில் மந்த நிலைமாறி சுறுசுறுப்புடன் வியாபார வளர்ச்சி பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறம் - பச்சை, வெண்மை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண் - 1, 5, 6.
பரிகாரம் - செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியருக்கு சிவப்பு நிற பூ வைத்து பாசிப்பயறு நைவேத்தியம் செய்ய கைமேல் பலன் கிடைக்கும்.
 
கடகம்
 
கடந்த கால தடைகள் நீங்கி வளம் பெறுவீர்கள். செய்யும் தொழிலில் அக்கறை கொண்டு செயல்படுவீர்கள். பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வங்கிக் கடன் கிடைக்கும். பண வரவு கிட்டும்.
 
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, கருப்பு, நீலம்.
அதிர்ஷ்டஎண் - 2, 4, 8.
பரிகாரம் - உப்பு நீரில் வீட்டை வியாழக்கிழமை துடைத்து விட்டு வீட்டில் நெய் தீபமிட்டு வணங்கி வர நினைத்தது கைகூடும்.
 
சிம்மம்
 
உறுதியான உங்களின் செயல்பாடுகள் தடையின்றி நடக்கும். புதிய திட்டங்களின் செயல்பாடுகளில் இருந்த தொய்வு நீங்கும். தொழிலில் முதலீடுகளை அதிகரித்து பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்வீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 1, 3, 9.
பரிகாரம் - ஞாயிற்றுக்கிழமை பைரவருக்கு கோதுமை மேல் நெய் தீபமேற்றி விளக்கு போட.வும். உங்களின் kனத்துணிவால் பொருளாதார வளமும் கிட்டும்.
 
கன்னி
 
கிடைக்காத பொருளுக்கு ஆசைப்படாமல் கிடைத்ததை வைத்து வாழ்வது நல்லது, கலைத்துறையில் வளம் பெற்று மேன்மை அடைவீர்கள். ஆசிரியர்கள் சுறுசுறுபுடன் செயல்படுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறம் - பச்சை, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 3, 5, 6.
பரிகாரம் - சனிக்கிழமை நலகிரக வழிபாடு செய்து பைரவருக்கு நெய் தீபமிட்டு வணங்கி வேண்டி கொள்ள எல்லாவற்றிலும் வெற்றி கிட்டும்.
 
துலாம்
 
வெளிநபர்களின் தொடர்புகளால் சிலருக்கு தொழில் வாய்ப்பு அமையும். முக்கிய அரசியல் தலைவரின் தொடர்பு உங்களின் வாழ்வில் எழிச்சியை உண்டாக்கி புதிய சக்தியைத் தரும்.
 
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, மஞ்சள், சிவப்பு.
அதிர்ஷ்ட எண் - 1, 3, 6.
பரிகாரம் - செவ்வாய், வெள்ளிகிழமைகளில் மாரியம்மனுக்கு வேப்பெண்ணெய் தீபமும், பழமும் வைத்து வேண்டி கொள்ள நினைத்தது தடையின்றி நடக்கும்.
 
விருச்சிகம்
 
சாதனையாளர்களாக நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு பல உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புகள் உங்களின் வாழ்வில் வளம் பெறச் செய்யும், பணியில் திறம்பட செயல்படுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, வெண்மை, நீலம்.
அதிர்ஷ்ட எண் - 2, 4, 8.
பரிகாரம் - வெள்ளிகிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு சிவப்பு நிற பூ வைத்து நெய் தீபமிட்டு வணங்கி வர தொழிலில் மேலும் வளம் பெறுவீர்கள்.
 
தனுசு
 
நண்பர்களின் சேர்க்கையில் கவனம் தேவை. தேவையற்ற சர்ச்சைக்கு இடம் அளிக்காமல் இருப்பது நல்லது. பணியில் கவனமுடன் செயல்படுவதும், பாதுகாப்பும் அவசியம்.
 
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், ஆரஞ்சு, நீலம்.
அதிர்ஷ்ட எண் - 3, 8, 9.
பரிகாரம் - ஞாயிறு அன்று நவகிரக வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு கருப்பு திராட்சை வைத்து வணங்கி வர நன்மைகள் உண்டாகும்.
 
மகரம்
 
உங்களின் எதிர்கால திட்டம் தொடர்ந்து செயல்பட துவங்கும். அரசியலில் இருப்பவருக்கு இழந்த பதவி மீண்டும் கிடைக்க வாய்ப்பு அமையும். பொருளாதாரம் மேம்படும்.
 
அதிர்ஷ்ட நிறம் - நீலம், மஞ்சள், கருப்பு.
அதிர்ஷ்ட எண் - 3, 4, 8.
பரிகாரம் - சனிக்கிழமைகளில் பைரவருக்கு ராகு காலத்தில் நல்வெண்ணெய் தீபமிட்டு வேண்டிக்கொள்ள சகல காரியமும் சித்தியாகும்.
 
கும்பம்
 
நினைத்தபடி காரியத்தை செயல்படுத்திக் கொள்வீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை உங்களுக்கு ஊக்கம் அளிக்கும். சிந்தனைகளை சிதரவிடாமல் செயலில் கவனம் செலுத்துவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறம் - நீலம், மஞ்சள், பலவர்ணம்.
அதிர்ஷ்ட எண் - 3, 7, 8.
பரிகாரம் - அஷ்டமி அன்று பைரவருக்கு நெய் தீபமிட்டு மஞ்சள் நிற பூ வைத்து வேண்டிக்கொள்ள வெற்றி கிட்டும்.
 
மீனம்
 
பல தொழில் வாய்ப்புகளை பெற்று பொருளாதாரத்தில் மேன்மை அடைவீர்கள். சிலருக்கு சிறு சிறு தடைகளால் காரிய தடை உண்டானாலும் நீங்கள் நினைத்தபடி செயல்படுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறம் - பச்சை, நீலம், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 2, 5, 8.
பரிகாரம் - செவ்வாய் கிழமை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை சுப்ரமணியருக்கு நெய் தீபமிட்டு வணங்கி வர காரியங்கள் தடையின்றி நடைபெறும்.
 
கணித்தவர் அருள்வாக்கு ஜோதிடர்
R.ஆனந்தன்.
91-9789341554.