16.03.2021 முதல் 31.03.2021 வரை

16.03.2021 முதல் 31.03.2021 வரை

மேஷம்
 
உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். சிலருக்கு புதிய திட்டங்களை செயல்படுத்தி வெற்றி பெற வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல நண்பர்களின் தொடர்பு உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
 
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, சிவப்பு, வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 1, 6, 9.
பரிகாரம் - வெள்ளிக்கிழமை அம்மனுக்கு நெய் தீபமிட்டு, சுப்ரமணியருக்கு துவரை சாதம் வைத்து வேண்டிக் கொள்ள சிறந்த வளர்ச்சியைப் பெறுவீர்கள்.
 
ரிஷபம்
 
சாமான்யமான விடயங்களை கூட சிறப்பாக செயல்படுத்துவீர்கள். பணியில் உங்களின் சுறுசுறுப்பான தன்மைகள் காரிய அனுகூலத்தைத் தரும். பணவரவு இருக்கும்.
 
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, சிவப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 1, 3, 6.
பரிகாரம் - செவ்வாய்கிழமை சுப்ரமணியரை வணங்கி வள்ளி தெய்வானைக்கு வெண் நிற பூ வைத்து வேண்டி கொள்ள நன்மை உண்டாகும்.
 
மிதுனம்
 
சொந்தங்கள் எவ்வளவு இருந்தாலும் ஏதோ ஒரு கவலை உங்களை வாட்டிக் கொண்டிருக்கும். தொழிலில் சிறிது கவனம் தவறினாலும் தடுமாற்றம் வந்து சேரும்.
 
அதிர்ஷ்ட நிறம் - பச்சை, ஆரஞ்சு, வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 2, 5, 9.
பரிகாரம் - சனிக்கிழமைகளில் பைரவருக்க நல்லெண்ணெய் தீபமும் அரளி பூ வைத்து வேண்டிக் கொள்ளவும் எல்லாம் சுபமாகும்.
 
கடகம்
 
கனவுகளில் கண்ட காட்சிகள் எல்லாம் நனவாக மாறும். காணல் நீராக இருந்தது எல்லாம் காரியானுகூலமாக மாறும். எதிர்கால திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்.
 
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, ஆரஞ்சு, சிவப்பு.
அதிர்ஷ்டஎண் - 2, 3, 9.
பரிகாரம் - ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் சிவ தரிசனமும், நவகிரக தரிசனமும் செய்தல் உத்தமம்.
 
சிம்மம்
 
கிடைத்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். சரியான முடிவுகளை எடுத்து எதிர்கால நலனை பலப்படுத்திக் கொள்வீர்கள். பொருளாதார நிலை மேம்படும்.
 
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, வெண்மை, ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 1, 6, 9.
பரிகாரம் - நவகிரக கேதுவுக்கு கொள்ளு பயறுவைத்து தேங்காய் எண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியைத் தரும்.
 
கன்னி
 
மனதில் தோன்றியதை செயலில் காண்பிப்பீர்கள். வெளிநாட்டு பயணம் சிறப்பாக அமையும். மிகவும் சரியான தொழிலை தேர்வு செய்து வெற்றி காண்பீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறம் - பச்சை, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 3, 5, 6.
பரிகாரம் - ஞாயிறு ராகு காலத்தில் நவகிரக வழிபாடும், நெய் தீபமும் இட்டு வேண்டிக் கொள்ள சகல காரியத்திலும் வெற்றி கிட்டும்.
 
துலாம்
 
சிறு தடைகள் வந்தாலும் சிறந்த பாதையை தேர்வு செய்வீர்கள். நல்லவர்களின் கூட்டு, நன்மையைத் தரும். வெளிநாட்டு பயணம் சிறப்பாக அமையும்.
 
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, சிவப்பு, பலவர்ணம்
அதிர்ஷ்ட எண் - 6, 7, 8.
பரிகாரம் - செவ்வாய் கிழமை விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் தீபமும். வெள்ளிக்கிழமை அம்மனுக்கு நெய் தீபமும் இட்டு வர சகல காரியமும் சிறக்கும்.
 
விருச்சிகம்
 
சந்தர்ப்பம் அறிந்து உங்களின் செயல்களை மற்றவருக்காக மாற்றிக் கொள்வீர்கள். பாதியில் நின்ற காரியம் செயல்பட துவங்கும். வளர்ச்சிக்கு நல்ல வழியை தேர்வு செய்வீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 9.
பரிகாரம் - வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு வெண்மை நிற பூ வைத்து நெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள வெற்றி கிட்டும்.
 
தனுசு
 
தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் பிறருக்கு தரும் மனம் உண்டாகும். சிறிது காலம் கழித்து சேமிப்புக்கு வழியை தேடுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், ஆரஞ்சு, பச்சை.
அதிர்ஷ்ட எண் - 1, 3, 9.
பரிகாரம் - சனிக்கிழமைகளில் மிளகு 27 கருப்பு துணியில் முடிந்து வைத்து நவகிரகத்திற்கு ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபமிட நன்மை பெருகும்.
 
மகரம்
 
முக்கிய விடயங்களில் தனி கவனம் செலுத்துவீர்கள். வசதிகளை கூட்டிக்கொண்டு, வளமான வாழ்வு வாழ வழியை உருவாக்கி கொள்வீர்கள். பொருளாதார நிலை மேம்படும்.
 
அதிர்ஷ்ட நிறம் - நீலம், வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 3, 6, 8.
பரிகாரம் - செவ்வாய்கிழமை சுப்ரமணியரையும் வெள்ளிக்கிழமை அம்மனையும் வணங்கி நெய் தீபம் ஏற்றினால் சகல காரியமும் வெற்றியைத் தரும்.
 
கும்பம்
 
குறுகிய காலத்தில் வளர்ச்சியை பெற முயற்சி செய்வீர்கள். வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும். அரசியலில் தனி திறன் கொண்டு செயல்படுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, கருப்பு, வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 1, 4, 6.
பரிகாரம் - ஞாயிறு ராகு காலத்தில் பைரவரையும் பிரதோச காலத்தில் சிவன் நந்தி வழிபாட்டையும் செய்து வர சிறப்பான வளர்ச்சியை பெறுவீர்கள்..
 
மீனம்
 
புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உங்களுக்கு சேர வேண்டிய பாக்கி வசூலாகும். அதிகாரத்தில் இருப்பவர்கள். மேலும் வளம் பெறுவீர்கள். தொழிலில் மேன்மை அடைவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், வெண்மை, ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 9.
பரிகாரம் - வெள்ளிக்கிழமை மகாலெட்சுமி / அம்மனுக்கு வெண் நிற பூ வைத்து, நெய் தீபமிட்டு வர தொழிலில் நல்ல வளம் பெறுவீர்கள்.
 
கணித்தவர் அருள்வாக்கு ஜோதிடர்
R.ஆனந்தன்
91-9289341554