01-07-2021 முதல் 15-07-2021 வரை

01-07-2021 முதல் 15-07-2021 வரை

மேஷம்
விரும்பிய செயல்களை செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். பாதியில் நின்ற காரியம் விரைவில் நடக்கும். பணியில் இடமாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 3, 6, 9.
பரிகாரம் - சனி, ஞாயிறுகளில் ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள எல்லாம் நன்மையாக அமையும்.
 
ரிஷபம்
முக்கிய  பிரமுகர்களின் சந்திப்பு நல்ல பலனை பெற்று தரும். அரசியலிலும், அரசாங்க காரியங்களிலும் சிறந்து விளங்குவீர்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, சிவப்பு, வெளிர் பச்சை.
அதிர்ஷ்ட எண் - 1, 2, 6.
பரிகாரம் - வெள்ளிக்கிழமைகளில் கருமாரி, வாராசி தரிசனம் செய்து விளக்கெண்ணெய் தீபமிட்டு வணங்கி வர எல்லாம் சிறப்பாகவும், தொழிலில் முன்னேற்றம் தரும்.
 
மிதுனம்
சரியான நேர்த்தில் உங்களின் செயல்பாடுகள் பாராட்டும்படி அமையும். அலுவலர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி பாராட்டு பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 1, 2, 3.
பரிகாரம் - சனிக்கிழமைகளில் பைரவர் வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்கி வர உங்களின் தடைபட்ட அனைத்து காரியமும் சிறப்பாக அமையும்.
 
கடகம்
தொழிலிலும், உத்தியோகத்திலும் கவனமுடன் செயல்படுவீர்கள். சில தடைகளை நண்பர்களின் உதவியுடன் செயல்படுத்துவீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, நீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண் - 2, 5, 8.
பரிகாரம் - சனிக்கிழமைகளில் விநாயருக்கு நெய் தீபமிட்டு அரிசி மாவு பண்டம் நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ள சகலமும் வெற்றி கிட்டும்.
 
சிம்மம்
சிறந்த நிர்வாகியாக இருந்தாலும் சில விடயங்களில் கவன சிதறல் வரும் கவனமுடன் இருப்பது நல்லது. சுறுசுறுப்புடன் செயல்படுவது உங்களின் சிறப்பு அம்சம்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட எண் - 1, 3, 5.
பரிகாரம் - செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியருக்கு சிறப்பு நிற பூ வைத்து இனிப்பு நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ள உங்களின் அனைத்து விடயமும் இறக்கும்.
 
கன்னி
பல சோதனைகளையும் தாண்டி வீரு நடை போடுவீர்கள். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். நேர்மையே உங்களின் நிரந்தர சொத்து.
அதிர்ஷ்ட நிறம் - பச்சை, வெண்மை, ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 3, 5, 9.
பரிகாரம் - புதன்கிழமைகளில் நரசிம்மர், பெருமாள் தரிசனம் செய்து நெய் தீபமிட்டு வணங்கி வர உங்களின் செயல்கள் அனைத்து சிறப்பாக அமையும்.
 
துலாம்
சரியான முடிவுகளை எடுக்க தயங்குவீர்கள். சாதாரண விடயத்தில் உபயோசித்து செயல்படுவீர்கள். அரசியலில் உங்களின் சேவை நல்ல பலனை பெற்று தரும்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, ஆரஞ்சு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 3, 6, 9.
பரிகாரம் - செவ்வாய்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு ரோஜா மாலை சாத்தி வேப்பெண்ணெய் தீபமிட்டு வேண்டிக்கொள்ள பல நன்மைகளும் வந்து சேரும்.
 
விருச்சிகம்
முன் யோசனைகளின்றி செயல்பட்டு சில நேரம் தடுமாற்றம் கொள்ளுவீர்கள். சரியான நேரத்தில் நண்பரின் உதவியால் எல்லாவற்றையும் சரி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, நீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண் - 5, 8, 9.
பரிகாரம் - ஞாயிறு ராகு காலத்தில் பைரவர் வழிபாடும் சிவப்பு நிற வைத்து 5 மிளகு துணியில் கட்டி நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள சகல காரியம் ஜெயமாகும்.
 
தனுசு
தீர்மானம் செய்த பிறகு மேற்பட்ட காரியமாக இருந்தாலும் அதனை முடித்து வைப்பீர்கள். பல விதமாக விடயங்களில் உங்களின் செயல்பாடுகள் இருந்து வரும்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், நீலம், சிவப்பு.
அதிர்ஷ்ட எண் - 1, 3, 8.
பரிகாரம் - வெள்ளிகிழமைகளில் அம்மனுக்கும் சுப்மணியருக்கு நெய் தீபமிட்டு வெள்ளை நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள எல்லாம் சிறப்பாக அமையும்.
 
மகரம்
பல காரியங்களை முழுபடுத்தாமல் எல்லாம் பாதியில் நின்று விடும்படி ஆகும். எதையும் தீர்மானத்து உங்களால் முடியாவிட்டாலும் பிறர் உதவியை நாடுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் - நீலம், மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 3, 6, 8.
பரிகாரம் - சனிக்கிழமை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு உங்களின் வேண்டுதலை சொல்லிவர அனைத்து காரியமும் தடையின்றி நடக்கும்.
 
கும்பம்
புத்திரர்களின் மூலம் சிலருக்கு பிரச்சனை வரலாம். பொருளாதார நெருக்கடியும், சின்ன விடயம் கூட சில நேரம் சாதனை போல தோன்றி செயல்பட வேண்டிவரும்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், வெண்மை, இளம் பச்சை.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 5.
பரிகாரம் - ஞாயிறு அன்று 9 முறை நவகிரக உலகெந்து ராகு காலத்தில் 3 நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள உங்களின் சகல காரியமும் சிரமமின்றி நடக்கும்.
 
மீனம்
கடந்த கால தேக்க நிலையிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்கால திட்டம் செயல்படதுவங்குவது மனமகிழ்ச்சியை தரும். தொழிலில் மேலும் சிறப்பை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், நீலம், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 3, 6, 8.
பரிகாரம் - வியாழக்கிழமை சித்தர் வழிபாடு, நவகிரக குரு வழிபாடு செய்து மனம் உருக வேண்டிக் கொண்டு நெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள அனைத்து காரியமும் வெற்றி கிட்டும்.
 
கணித்தவர் அருள்வாக்கு ஜோதிடர்
வாடிபட்டி R.ஆனந்தன்
செல் - 91-9789341554