சித்தர்களின் தியானம்

சித்தர்களின் தியானம்

ஞானம்

ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என்று நான்கு படிகள் உள்ளது. ஞானத்தில் சரியை என் பது, ஞானபாதமாகிய சன்மார்க்கம். இது ஆசாரிய னிடம் உபதேசம் பெறுதலாகும். ஞானத்தில் கிரியை என்பது அப்படிக் கேட்டதைச் சிந்தித்தல் ஆகும். ஞானத்தில் யோகம், அந்த உபதேசத்தை மிகவும் தெளிவாகத் தெரிந்துகொள்ளுதல். ஞானத் தில் ஞானம் என்பது தெளிந்த பின்பு நிட்டை கூடு தலாகும்.

சகலமும் பிரம்ம மயமாகக் கருதி, சுய அனுப வத்தால் நோக்குகின்ற ஆத்மஞானி, பிராரத்துவ வசத்தில் அணுவளவும் பேதாபேதமில்லாமல் சுய அனுபவமாகப் பிரகாசிக்கின்ற மனதுடன் விளங்கு வாரானால் அவரே மேன்மையான பரமஞானி யாகி சாயுச்சிய பதவியை அடைவார்.

மேலே சொல்லி வந்த சரியை, கிரியை, யோகம் என்னும் மூன்றும் ஞானமென்னும் வீட் டிற்கு உதவியான படிகளென்று முன்பே சொல்லி யுள்ளோம். ஆதலால் நாம் ஒவ்வொரு படியாக,  படிப்படியாகப் படிகளைக் கடந்து வீட்டினுள் பிர வேசித்தாலன்றி வீட்டுக்குள் இருக்கும் பொரு ளைக் காண முடியாது.

இங்கே குறிப்பிட்டுள்ள யோகப் பயிற்சிகள் எல்லாம் அட்டாங்க யோக வகையைச் சேர்ந்ததா கும். இதை ‘ஹடயோகம்’ என்பார்கள். இவை உடலை வருத்தி ஆசனங்கள் செய்து அவற்றில் நின்று செயற்பட்டு சாதனை புரிவதா கும்.

இராஜயோகம்

இராஜயோகத்தில் எளிமையான தியானப் பயிற்சிகளால் உடலை வருத்தாமல் அமைதியாக சுவாசத்தின் போக்கை உணர்ந்து சுகாசனத்தில் இருந்து செயற்பட்டு சாதனை புரிவதாகும். இது மிகவும் எளிமையான யோக தியானமாகும். இந்த இராஜ யோக வித்தையை திருமந்திரத்தில் திரு மூலர் மிக அருமையாக விளக்கியுள்ளார்.

அதேபோல மாணிக்கவாசகர் தமது திருவாசகத் திலும் தனது இராஜ யோகத்தின் அனுபவங்க ளையே மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால் பலர் திருவாசகத்தில் சொன்ன சிவராஜ யோகத்தை உணரவில்லை. அதேபோல ஔவையாரும் விநா யகர் அகவலில் குண்டலினி யோகத்தைப் பற்றியே கூறியுள்ளார்.

இந்த இராஜயோகப் பயிற்சியில் பிராணாயா மம் என்னும் சுவாசத்தை இழுத்து நிறுத்தி வெளியே விட வேண்டிய பயிற்சி எதுவும் கிடை யாது. ஆசனங்கள் எதுவும் கிடையாது. உணர்வு டன் சுவாசத்தை உள்ளே இழுத்தும் வெளியே விட் டும் பார்வையை புருவ மத்தியில் நிறுத்தி சுவாசம் உள்ளே வெளியே போய் வருவதைக் கவனித்துக் கொண்டு இருக்க வேண்டும். சுகாசனத்தில் உட் கார்ந்து செயற்பட்டால் போதும் இந்த தியானத் தைக் குறிப்பிட்ட நேரத்தில்தான் செய்ய வேண்டும் என்ற விதிகள் எதுவும் இல்லை.

இந்த தியானத்தில் ‘ஸோஹம்’ என்னும் அஜபா மந்திரத்தை மனதில் எண்ணிக்கொண்டு சுவா சத்தை இழுத்துவிட்டுவர வேண்டும். சுவாசத்தை உள்ளே இழுக்கும்போது ‘ஸோ’ என்ற மந்திர எழுத்தை மனதில் எண்ணி இழுக்க வேண்டும். சுவாசத்தை வெளியேவிடும்போது ‘ஹம்’ என்ற எழுத்தை மனதில் எண்ணி வெளியே விட வேண் டும்.

இது ‘செபிக்காத மந்திரம்’ என்று சொல்லப் படும் அஜபா ஜெப தியானமாகும். இத்தியா னத்தை ஆண், பெண், வயதானவர்கள் எல்லோ ரும் செய்யலாம். இந்த தியானத்தை கீழே உட் கார்ந்து செய்ய முடியாதவர்கள் நாற்காலியிலோ பெஞ்சிலோ உட்கார்ந்து செய்யலாம். நின்று கொண்டும் நடந்துகொண்டும் செய்யலாம். அமை தியாகப் படுத்துக் கொண்டுகூடச் செய்யலாம். இதில் சுவாச உணர்வுதான் முக்கியம்.

தியானங்களிலேயே அஜபா ஜெப தியானம் என்று சொல்லும் சிவராஜயோகம் என்கிற வாசி யோக தியானத்தைத்தான், சகல காரிய சித்தி அளிக் கும் தியானம் என்று சித்தர்கள் சொல்லியிருக்கி றார்கள். ஆகவே, இந்த தியானத்தின் பலன்கள் அளவிட முடியாததாகும். இதை உணர்வுடன்  எவ் வளவு அதிகம் செய்கிறீர்களோ அவ்வளவு பலன் கள் கிடைக்கும். காரிய சித்தியை அடையக் கூடிய தியானம் இது ஒன்றுதான்.

மற்ற தியானங்களில் ‘மனதை ஒருநிலைப் படுத்து’ என்பார்கள். ஆனால் மனதை ஒரு நிலைப் படுத்துவது சிரமம். சிவராஜயோக தியானத்தில் மனம் வசப்பட்டுவிடும். தியானம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே எந்த எண்ணங்களும் வராது. ஆகவே இத்தியானத்தில் வெளிமனம் அடங்கிவிடுகிறது.

இதைத்தான் விநாயகர் அகவலில் ஔவை யார், “ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்” என்று சொல்கிறார். இப்படியாக அஜபா ஜெப தியானத்தில் வெளிமனம் அடங்கி உள்மனம் திறந்துவிடுகிறது. இதைத்தான் ஆல்பா நிலை என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். மனம் ஆல்பா நிலையில் இருக்கும்போதே நமது விருப்பங்களை எல்லாம் பூர்த்தி செய்துகொள்ளலாம். ஆல்பா நிலையில் மனக்காட்சியாக நாம் எதை அடைய விரும்புகிறோமோ அதை அடைந்து விட்டதாக மனச்சாட்சியை உருவாக்கி அதைப் பார்த்து வர வேண்டும். இப்படி படக்காட்சியைப் பார்ப்பதைத் தான் ஆல்பா நிலையில் செயற்படுத்தி வேண்டிய வசதிகளை அடையும் மார்க்கத்தை ஔவையார் எளிய முறையில் சொல்லியுள்ளார்.

நமது விருப்பம் எதுவோ அதை மனச்சாட்சி யில் படமாகக் கற்பனையில் பார்த்து வரவேண் டும். அதன்பிறகு நாம் அதை அடைந்துவிட்டதாக பாவனை செய்து மகிழ வேண்டும். படக்காட்சி யைப் பார்த்து, மனத்திரையில் பார்த்து, மகிழ்ச்சி யுடன் நாம் அதை அடைந்துவிட்டதாக பாவனை செய்தால், அதன் பலனாக, நாம் மனக்காட்சியில் விரும்பிப் பார்த்ததை அடைந்துவிடலாம்.

ஆல்பா தியான நிலையை அடைய இன்னும் ஒரு உபாயமும் இருக்கிறது. இதை தந்திரயோக தியானத்தில் சூட்சும தூக்கம் என்கிறார்கள். இதைத் தூங்காமல் தூங்கும் நிலை என்பார்கள். தூங்கும் நிலை வரும். ஆனால் தூங்கிவிட மாட்டோம். விழிப்புநிலை வரும். ஆனால் விழிக்க முடியாது. இது ஒரு அற்புதமான நிலையாகும். ஆகவே இப்படி சுலபமாக மேலே சொல்லிய இரண்டு உபாயங்களில் நாம் நமக்கு வேண்டிய வசதி களைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்.