உடல் எடை கூட்டலாம், குறைக்கலாம் எளிதாக
உடல் எடையை கூட்டவோ, குறைக்கவோ எளிதான வழிகள் உள்ளனவா என்று நமது அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதாவிடம் கேட்டோம்.
அதற்கு அவர் அளித்த பதில்,
உடல் எடையைக் கூட்ட பேரீச்சம் பழம் மிகவும் உதவும். பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்துக் கிடைக்கிறது. தினமும் இரண்டு பேரீச்சம் பழமும் பாலும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.
அதேப்போல உடலுக்கு போதுமான இரும்புச் சத்து இருந்தால் முடி உதிர்வதும் தவிர்க்கப்படும்.
ரொம்ப ரொம்ப ஒல்லியாக இருப்பவர்கள், தங்களது உடல் எடையைக் கூட்ட வேண்டும் என்றால் நிறைய ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்.
பாலில் தேன் ஊற்றி சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கும்.
அதே சமயம் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், பலரும் பல வழிகளை கையாள்கிறார்கள். உடற்பயிற்சி, நடனம் போன்றவற்றில் ஈடுபடுவதால் நிச்சயம் உடல் எடை குறையும். ஆனால் அதனை தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. நிறுத்திவிட்டால் உடனடியாக உடல் எடை அதிகரித்துவிடும்.
அதற்கு மாற்றாக யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடலாம். எடுத்ததுமே கடினமான ஆசனங்கள் செய்யாமல் முதலில் எளிதான ஆசனங்களை செய்து படிப்படியாக யோகாவில் பயிற்சி பெறலாம்.
வெதுவெதுப்பான சுடுநீரில் தேன் ஊற்றி சாப்பிட்டால் உடல் எடை குறையும்.