2023 - 2025 சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள் - ரிஷபம்

தன்னுடைய முக வசியத்தால் அவைரையும் கவரும் ரிஷப ராசி வாசகர்களே!
 
இதுவரையிலும் உங்களின் ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் இருந்து வந்த சனி இனி தொழில் ஸ்தானத்திற்கு  வரவிருக்கிறார். இந்த சனி பகவான் உங்களின் ராசிக்கு யோகாதிபதி என்பதால், பாக்கியஸ்தானத்தில் இருக்கும் போது புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வதும் சுகமான வாழ்க்கையும் அமையப் பெற்றிருப்பீர்கள். இனி 29.03.2023 முதல் தொழில் ஸ்தானத்திற்கு வந்து அமர்வதும், விரையஸ்தானத்தை பார்ப்பதும் உங்களின் வளமான வாழ்வு பெறும் சந்தர்ப்பம் அமையப் பெறுவீர்கள். தர்ம கர்மாதிபதி யோகத்தை பெற்றுள்ள நீங்கள், தான தர்மங்களையும் ஊரில் முக்கிய பிரமுகராகும். வாய்ப்பும் உங்களுக்கு அமையும். 
 
உங்களைச் சுற்றி ஒரு கூட்டத்தை உருவாக்கி கொள்வீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களின் அந்தஸ்து கூடும். மக்கள் உங்களிடம் வசியமாவார்கள். கடல் கடந்த வாணிபம் நல்ல வளர்ச்சியை தரும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். வாகன ஓட்டிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். சுற்றுலா ஸ்தாபனம் வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். சொந்த வீடு, மனை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பலருக்கு உணவு அளித்து பசியாற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். புத்திர, புத்திரிகளுக்கு வேலையும், திருமணமும் நடக்கும். நேர்மையாக வாழ வேண்டுமென்று நினைப்பீர்கள். 
 
கடந்த கால வாழ்க்கை முறைகளிலிருந்து விடுபட்டு, விருப்பமான முறையில் வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள். தீய  பழக்கம் உள்ளவர்கள் அதனை மறந்து நல்ல பழக்கங்களுக்கு உங்களை வழக்கப்படுத்திக் கொள்வீர்கள். சமையல் கலைஞர்களுக்கு வாழ்க்கையில் மேன்மை அடைய சந்தர்ப்பம் அமையும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உடல்நல குறைபாடுகளிலிருந்து மீண்டு நலம் பெறுவீர்கள். உங்களின் கர்ம வினைகளை தீர்த்து கொள்ள பரிகார பூஜைகளை செய்து  ஆன்மீக  பலம்  பெற்று வளமாக வாழ்வீர்கள். எலும்பு சம்மந்தமாக, நோய்களிலிருந்து விடுபடுவீர்கள். வெளிநாடு பயணம் சிலருக்கு நல்ல வருமானத்தை பெற்று தரும். பொருளாதார நிலை மேன்மை உண்டாகும்.

பரிகாரம்:
 
ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணிக்கும் ராகு காலத்தில் பைரவருக்கு நல்லெலண்ணெய் தீபமிட்டு, மிளகு கலந்த வெண் பொங்கல் வைத்து வழிபட்டு வர, உங்களின் வாழ்வில் நினைத்த காரியம் கைகூடும்.