ரெய்கி பாகம் - 3

ரெய்கி பாகம் - 3

மிகாவ் உசுயி ஏற்படுத்திய தத்துவங்கள் பற்றிக் காண்போம்.

Total Surrender - முழுமையான சரணாகதி
Inner outer purity - உள்ளும் புறமும் தூய்மை
Good cause - தூய்மையான எண்ணங்கள்
Strong intention - முழு ஈடுபாடு
strong belief - அதிக நம்பிக்கை வைத்தல்
on higher energy this is for super status happy & healthy & energetic & positive

இதுவே மிகாவ் உசுயி ஏற்படுத்திய ரெய்கி தத்துவங்கள் ஆகும். இவருக்கு பிறகு சுஜிரோ ஹயாஷி என்பவர் இவருடைய முறையை பின்பற்றி வந்தார். இந்த சமயத்தில் ஹவாயோ டகாடா என்னும் அமெரிக்கப் பெண்மணி, ஜப்பானில் திருமணம் முடித்து, 44 வருடத்துக்குப் பின் அவர் கணவர் விபத்தில் மறைய, அவர் பெரிய மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, உடம்பிலும் பல பிரச்சனைகளுக்கு ஆளானார். அப்பொழுது அவருக்கு 2 பெண் குழந்தைகளும் இருந்தனர். பல பிரச்சனைகளுக்கு தள்ளப்பட்டு பல வியாதிகளுக்கு உட்பட்டதால் ஆபரேஷன் நிலைக்கு தள்ளப்பட்டார். சர்க்கரை வியாதியும் உறுதி செய்யப்பட்டுவிட்டது.  அப்பொழுது அவருக்கு ஒரு கனவு ஏற்பட்டது. அதுவே உள் மனதில் எதிரொலித்தது. இந்த விஷயத்தை ஆபரேஷன் செய்யும் டாக்டரிடமும் சொன்னார். அவரும் இவருடைய உள் மனக்கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆபரேஷன் தவிர்த்து, சுஜிரோ ஹயாஷி என்பவரிடம் அனுப்பி ரெய்கி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள அனுப்பினார். அங்கு பரிசோதனையில் அவருக்கு முற்றிய நிலையில் இருந்தததால் 4 மாதத்திற்கு ரெய்கி சிகிச்சை அளித்தார்கள். அவருக்கு மனப்பிரச்சனை, உடல்பிரச்சனை முழுவதும் நீங்கி ஆரோக்கிய பெண்மணியாக மாறினார். அப்பொழுது அவர் தீர்க்கமான ஒரு முடிவு எடுத்தார்.  இந்த ரெய்கி சக்தியால் நமக்கு கிடைத்த பலன் மாதிரி, உலக மக்கள் அனைவருக்கும் இது போய் சேர வேண்டும். இதனால் அனைவரும் ழுழுப்பலன் பெற்று ஆரோக்கியம், இன்பம் அனுபவிக்க வேண்டும் என்று எண்ணி, இக்கலையை தனக்கு சொல்லக் கொடுக்குமாறு நல்லெண்ணத்தோடு கேட்டார். மற்றொரு பெண்மணிக்கும்  அவருக்கும் ரெய்கி இரகசியக் கலையை கற்றுக் கொடுத்துவிட்டு, இரண்டாம் உலகப்போரில் அவர் மறைந்தார். மூன்றாவதாக இந்தப் பெண்மணி தனக்கு தெரிந்த இக்கலையை உலக முழுவதும் போய்ச் சேர வேண்டுமென்று எண்ணி 600 பேரை நியமித்து அவர்களுக்கெல்லாம் இதைச் சொல்லிக் கொடுத்து பரப்பச் செய்தார். அமெரிக்காவிலும், ஜப்பானிலும் இவர் ஏற்படுத்திய நிறுவனங்கள் இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் இவருடைய இரண்டு பெண் குழந்தைகளும் இந்த ரெய்கிக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்கள். பழங்காலத்தில் சித்தர்களும் இயேசு கிறிஸ்துவும் மக்களுக்கு நன்மை செய்து விட்டு மறைந்து விட்டார்கள். அவர்களுடைய முறையைத் தான் மிகாவ் உசுயி திரும்பவும் அறிமுகப்படுத்தினார். உலகம் முழுவதும் பரவச்செய்த பெருமை டகாடா அவர்களையே சாரும். ஆதலால் உலக அளவில் மூன்று ரெய்கிகுருக்களான 

1. டாக்டர். மிகாவ் உசுயி அவர்கள்

2.  டாக்டர். சுஜிரோ ஹயாஷி அவர்கள்

3. வாயே டகாடா அவர்கள்

இந்த வழிமுறைகளால்தான் எற்கனவே இந்தியாவிலிருந்து ஜப்பானுக்குப் போய் திரும்பவும் இந்தியாவுக்கு வந்துள்ளது. ஆனால் தற்சமயம்  ரெய்கி ஓர் ஜப்பானியக்கலை என்றே இன்று சொல்கிறார்கள. நம் கலை திரும்ப நமக்கு வந்த பிறகு அதில் சில யுக்திகளை புகுத்தி ரெய்கி என்ற பெயரோடு நியூ லைப் ரெய்கி என்று ஏற்படுத்தி உள்ளார்கள்.

நியூ லைப் ரெய்கி முறையில் உம்மையும், மனதையும் சுத்தப்படுத்தும் ஸோஹம் என்ற மூச்சுப் பயிற்சியை முதலாவதாக வைத்துள்ளது. இரண்டாவதாக ரெய்கி தியானம் இதில் முழு உடம்பையும் Relax செய்து ரெய்கியை Golden Ball ஆக உருவகப்படுத்தி ஒவ்வொரு சக்கரத்தையும் சக்தியூட்டுவது மூன்றாவதாக சக்ரா தியானம் சக்கரங்களை ஒவ்வொருவரும் சமநிலையில் வைத்துக் கொண்டால் நோயின்றி இருக்கலாம்.சக்கரங்களின் அமைப்பும் அதன் விவரங்களும் Chakra Means Lotus சக்கரங்கள் என்பது நமது உடம்பின் சக்தி மையங்கள். உடம்பின் மேலி ருந்து கீழ் வரை 7 சக்கரமும் உள்ளங்கை சக்கரம், பாதசக்கரம், விரல் நுனிகளில் மினி சக்ரா என்று இருக்கிறது. 7 சக்கரமும் 7 கலரில் இருப்பதாக சித்தர்கள் சொல்லி உள்ளார்கள். மேலும சக்கரங்கள் மந்திரத்துக்கு கட்டுப் படும் என்றும் சொல்லியுள்ளனர். சக்கரங்களின் பெயரையும், அதன் அமைப்பு, Function முழுவிவரமும் பார்க்கலாம்.

ஸகஸ்ரா சக்கரம் - ஆயிரம் இதழ்

Third Eye - இரண்டு இதழ் (அல்லது)  96 இதழ்கள்

Heart Chakra - 16 இதழ்

Solar Pleyus - 10 இதழ்

Sacrel Pleyus  - 6 இதழ்

Basic - 4 இதழ்

இந்த அமைப்பில் இருப்பதாக உருவகப்படுத்தி உள்ளார்கள்.

சக்கரங்களின் குணங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

1. தலைஉச்சி சக்கரம் Crown Chakra - நரம்புமண்டலத்தை ஆட்சி செய்கிறது. spiritually, cosmic, energy connection enlightment awenking consiouses, ஆன்மீகத்தில் உயர்நிலையை அடையச் செய்கிறது.

2. நெற்றி சக்கரம் Thiry eye & முதல் 2 சக்கரமும் நரம்பு Control மண்டலத்தை செய்கிறது. self control, will power, concentection, Intelligence, intution, clair voyance ட்யூட்டரி சுரப்பி நன்றாக தூண்டப்படுவதால் மேன்மை நிலை ஏற்படும்.

3. தொண்டை  சக்கரம் Throat chakra - நோய் எதிப்பு சக்தி கொடுக்கிறது. தைராய்டு சுரப்பியோடு தொடர்பு உடையது. Self expression, communication self element.

4. இருதய சக்கரம் Heart chakra - இருதயம், lungs - ன் மேல் பகுதி, தைமஸ்Gland Love & affection compassion எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் air element

5. வயிறு சக்கரம் solar plexus - ஜீரண சக்தியோடு தொடர்பு உடையது. Fire element சிறுகுடல், பெருங்குடல், பான்கிரியாஸ் சக்தியின் மொத்த இருப்பிடம் power house - power wisdom

6. தொப்புளடி சக்கரம் Sacrel plexus & Sex argaus abundance இனவிருத்தியோடு தொடர்பு உடையது.

7. மூலாதார சக்கரம் - எலும்பு மண்ட லத்தை தாங்கி பிடிக்கிறது. Security, stability, பூமியோடு தொடர்பு உடையது.

ஒவ்வொரு உடம்பைச் சுற்றிலும் கண்ணுக்குத் தெரியாத சூட்சும் சக்தி உண்டு. இதற்கு `ஆரா' (Aara) என்று பெயர். வெளி உடல் ஆரா உடல் ஆரா, ஆரோக்கிய உடல் ஆரா என்று மூன்று பிரிவு உண்டு. தியானங்களில் படிப்படியாக முன்னேறி ஆரா நிலையை 7 கலரில் கொண்டு வரலாம். இதை கிரிலியின் போட்டோ கிராபி மூலமாக துல்லியமாக பார்கலாம்.

ஒவ்வொருவரும் நேர்மறையான எண்ணங்கள், உள்ளும் புறமும் தூய்மை, என்றிருக்கும் போது ஆரா நன்றாக விரிவடைந்து சக்தியுடையதாக இருக்கும். சிலருடைய ஆரா இருக்காது. ஒருவருக்கு ஆரா weak ஆக இருக்கும் போது மற்றவர்களுடைய திருஷ்டிப்பார்வை, பொருமை இவர்களுடைய பார்வை படும்போது கண்டிப்பாக அது பிரச்சனையை ஏற்படுத்தும் ஒவ்வொருவருக்கும ஆரா 2 meter அளவிற்கு இருக்க வேண்டும் என்பது பொதுவான விதிமுறை சித்தர்கள், மகான்கள், உயர்நிலையை அடையப் பெற்றவர்களுக்கு ஆராவானது ரொம்ப தூரத்திற்கும் சக்தியை அடையபெற்று, இருப்பதால் தான் அவர்களுடைய பார்வை பட்டாலோ அவர்களை ஆசீர்வாதம் கிடைக்கப் பெறும்போது நல்ல மாற்றம் மனதிற்கு அமைதி முன்னேற்றம் கொடுக்கிறது.

ஒவ்வொரு வருக்கும் ஆரா சக்ரா எப்படி இருக்கிறது என்பதை பெண்டுலம் மூலமாக பார்த்து நாம் சரி செய்து கொள்ளலாம் எவ்வளவு சதவீதம் positive - negative என்று தெரிந்து மூச்சுப்பயிற்சி, தியானம் கிரிஸ்டல் மூலமாக பலப்படுத்தலாம். ஆராவையும் சக்ராவையும் பலப்படுத்தும் போது நோயும் உட்புகாது ஆரோக்கியமாக இருக்கலாம். இரவு படுக்கும் முன்பு சக்ரா தியானம் செய்தால் எல்லா சக்கரமும் சமநிலைக்கு வந்து உடல் ஆராக்கியம், மன ஆராக்கியம், பெற்று உடல், மனம், ஆன்மா மூன்றும் ஒருங்கிணைந்து எலலா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ ரெய்கி ஓர் உறுதுணையாக இருக்கும் என்பதில் சிறிது ஐயமில்லை.