ரெய்கி பாகம் - 4

ரெய்கி பாகம் - 4

நாம் இதுவரைக்கும் ரெய்கி என்றால் என்ன? என்பதையும்,ரெய்கியின் வரலாறு பற்றியும், நமது உடம்பில் உள்ள ஆரா மற்றும் சக்கரங்கள் குறித்த விளக்கத்தையும் கண்டோம். தொடர்ந்து வாசிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். அதனையும் கடந்து சந்தேகம் இருந்தால் கடிதம் மூலம் தொடர்பு கொண்டால் விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறேன். நாம் இப்போது ரெய்கியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதனைப்பற்றியும், அதன் பலன்கள் குறித்தும் காண்போம்.

குரு மூலமாக ஒருவர், தனக்குள் இருக்கும் தேவையற்ற சக்திகள், தேவையற்ற எண்ணங்கள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்திவிட்டு, `ஈகோ' வையும் துறந்துவிட்டு, அதன் பிறகு தீட்சை எடுத்துக் கொண்டால், அதாவது பிரபஞ்ச சக்தி யைத் தனக்குள் உள்வாங்கிய பிறகு, அதனைக் கைகள் மூலமாக வெளிக்கொணர்ந்து, உள்ளங்கைகளில் அந்தச் சக்தியை உணர்ந்து, அந்த சக்தியோடு சில மந்திரங்களையும் சேர்த்து, தனக்குத் தானே சிகிச்சை (சக்தி) அளித்துக் கொள்ளலாம். உடல் முழுவதும் ஏழு சக்கரங்களுக்கும், கண், காது, தாடை, தோள் பட்டை, கால்கள் என எல்லா பாகங்களுக்கும் மந்திரம் சொல்லி சக்தி கொடுத்து, வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். இருக்க இயலும், இது உறுதி. ரெய்கி குறியீடுகளை ( Reiki symbols )மந்திரங்கள் என்று சொல்லாம். இம்மந்திரச் சொற்களை உச்சரித்துக் கொண்டு, குருவை நினைத்து இரண்டு தினங்கள் தியானம் செய்துவிட்டு ஆகாயத்தில் பார்க்கும் போது கிடைக்கும் சக்தி அளப்பரியது.

பிறருக்கும் மற்றவர்களுக்கும் தொட்டும், தொடாமலும், தள்ளி நின்றும் சக்தியை வழங்கலாம். பிறருடைய நோயையும் குணப்படுத்தலாம். உடல் ரீதியான பிரச்சனைகளுக்கும், மனரீதியான பிரச்சனைகளுக்கும் உரிய நிவாரணம் அளிக்கலாம். குடிப் பழக்கத் திற்கு அடிமையானவர்களை ரெய்கி மூலம் நல்வழிப்படுத்தலாம்.

கணவன் மனைவியிடையேயான நேசிப்பை அதிகரிக்கச்செய்யலாம். அதாவது கணவன் அல்லது மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் ரெய்கி பயிற்சியை எடுத்துக்கொண்டால் மனம் பக்குவமடைகிறது. பொறுமையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், மற்றவர்களை மன்னிக்கும் தன்மையும், விரோதிகளுக்குக் கூட நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணங்களும் அதிகரிக்கும். மேலும் உயர்ந்த நற்குணங்கள் நம்மிடையே தங்கிவிடுவதால் ஒருவருக்கொருவர் தூய்மை யான அன்பைப் பரிமாறிக்கொள்ளமுடியும்.

தொலைதுரத்தில் இருந்தே ரெய்கி சிகிச்சையை வழங்க இயலும். அதாவது வெளியூரில் இருப்பவர்களுக்கும், வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் கூட நாம் இருந்த இடத்திலிருந்தே சக்திகளை அனுப்பி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.  உதாரணமாக எங்கோ நடக்கும் நிகழ்வுகளைக் காற்று மண்டலத்தின் உதவியுடன் நாம் இருந்த இடத்திலிருந்தே தொலைக்காட்சி வழியாகப் பார்க்கிறோமல்லவா. அதே போல நாம் அனுப்பும் ரெய்கி சக்தியும் காற்று மண்டலத்தின் வழியாகவும், தேர்ட் டீ ட்யூனிங் (Third eye tuning) வழியாகவும் சம்பந்தப்பட்டவர்களைச் சென்றடையும்.

தேர்வு சமயத்தில் படிக்கும் மாணவர்களுக்குச் சக்தி அனுப்பி நன்றாக எழுதவும், அதிக மதிப் பெண் பெற வைக்கவும் ரெய்கியினை பயன்படுத்தலாம்.

நமக்கும், பிறருக்கும், வாகனங்களுக்கும், குடியிருக்கும் வீட்டுக்கும் எந்தத் தீய சக்தியும் அணுகாதவாறு பாதுகாப்புக் கவசத்தையும் இதன் மூலம் அமைத்துக் கொள்ளலாம்.

நாம் குடியிருக்கும் வீட்டைத் தூய்மைப்படுத்தி, சக்தியூட்டி வீட்டிலிருப்பவர்களை ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வைத்திருக்கவும் பயன்படுத்தலாம்.

தேர்வு எழுதும் பேனாவிற்கும் ரெய்கி சக்தியை வழங்க இயலும். மருந்து மாத்திரைகளுக்கும் ரெய்கி சக்தியை வழங்கி, அதன்பின் சாப்பிட்டால் நோய்கள் விரைவில் குணமாகும். தீய பழக்கம் எல் லாவற்றிலுமிருந்தும் ரெய்கி மூலம் நம்மைப் பாதுகாக்கலாம்.

காணாமல் போன பொருட்களையும் கண்டறியலாம்...

ரெய்கியின் சக்தியைப் பயன்படுத்தி, கிடைக்கும் பலன்களை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

டொக்டர் மிகாவ் உசாயி கண்டுபிடித்தவை `ட்ரெடிசனல் ரெய்கி' (Traditional reiki) என்றும், அதன் பிறகு சில மாற்றங்களுடன் வெளிவந்த ரெய்கியை `கருணா ரெய்கி' (Karuna reiki) என்றும், பின்பு `நியூ லைஃப் ரெய்கி' என்றும் மாற்றியமைக்கப்பட்டது. இந்த மாற்றங்கள் எல்லாம் காலப்போக்கில் ஏற்பட்டவை தான்.

ட்ரெடிசனல் ரெய்கியில் மூன்று குறியீடுகளை (symbols) மட்டுமே பயன்படுத்துவார்கள். அதனைப் பற்றித் தற்போது காண்போம்.

1) Cho -ku-ray (சோ-கூ-ரே)

2) Sai-kai-kay (சாய்-காய்-கே

3) Hon-sha-za-sho-nen (ஹான்-ஸ-ஸோ-னென்)

சோ-கூ-ரே : இம்மந்திரம் எல்லாவற்றிற்கும் பொதுவாக உபயோகிக்கும் மந்திரம். ஏனெனில் மிக மிக சக்தி வாய்ந்த மந்திரம் இது. பூமியையும், ஆகாயத்தையும் இணைக்கும் நேர் செங்குத்துக் கோடு. அதாவது பூமியும், ஆகாயமும் இணைந்தது தான் பிரபஞ்ச சக்தி என்றும் சொல்லாம். இதை உடல் முழுவதும், உடலின் எல்லா பாகங்களிலும் போடலாம். அனைத்துப் பொருள்களின் மீது சொல்லிப்பார்த்தும் பயன்படுத்தலாம். எல்லா இடங்களிலும் வரைந்து பார்த்தும் சக்தி அளிக்கலாம். சாப்பிடும் பொருட்களில் இந்த மூன்று மந்திரங்களையும் பயன்படுத்தலாம். நல்ல விடயங்களுக்கும், நல்ல நோக்கத்திற்கும் இதனைப் பயன்படுத்தலாம்.

சாய்-காய்-கே : இரண்டாவது மந்திரமான இதனைப் பொதுவாகவும், முதல் இரண்டு சக்கரத்திற்கும் போட்டுப் பயன்படுத்தலாம். இதன் மூலம் சுயக்கட்டுபாடு, மன உறுதி, தன்னம்பிக்கை ஆகிய நல்ல பழக்கங்களும், நரம்பு தளர்ச்சி மற்றும் தீய பழக்கங்களிலிருந்து விடு பட உதவி புரிகிறது. அதிகமாக குறும்பு செய்யும் குழந்தைகளை கட்டுப்படுத்தவும் இதனைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு மிகவும் தேவையான நினைவுத் திறனையும், அறிவு கூர்மையையும் அதிகரிக்கச் செய்யலாம். உயர் சக்திகளான இன்ட்யூசன் (Intution), டெலிபதி ஆகியவற்றையும் மேம்படுத்தலாம்.

ஹான்-ஸ-ஸோ-னென் :  இது மூன்றாவது மந்திரம். இது ஒரு நீளமான மந்திரம். தொலைதூர  சிகிச்சையில் பயன்படும் ஒரு மந்திரமும் கூட. நாம் அனுப்பும் சக்தி, மிக உயரமான இடங்களை கடந்து, அதிக தொலைவிற்குச் செல்லும் வல்லமை வாய்ந்தது. தலை முதல் கால் வரை போடலாம். கர்ம வினையை நீக்கவும் பயன்படுத்தலாம். நாள்பட்ட வியாதிகள், முதுகு வலி, தண்டுவட பிரச்சனை, கால்வலி, உடம்பின் பின்பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் சக்தி கொடுத்து பயனடையச் செய்யலாம். இதில் பாரம்பரியமான முறை மற்றும் பாரம்பரியமற்ற முறை என இரண்டு வகைகள் இருக்கிறது. இம்மந்திரம் தொலைதூர சிகிச்சைக்கு அதிக பலனை கொடுக்கும். உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருப்பவர்களுக்கு மூன்றாவது கண் என்ற தொடர்பினை ஏற்படுத்தி, சக்தி அனுப்பி, அவர்களுடைய பிரச் சனைக்குத் தீர்வு காணலாம். நாம் யாருக்குச் செய்கிறோமோ அவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி, கை கால்களை அசையா வண்ணம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கச் சொல்லியோ அல்லது படுத்திருக்கச் சொல்லியோ, நாம் இருக்கும் இடத்தில், நமக்கு எதிரே அவர்களை இருக்குமாறு கற்பனை செய்து, மூன்றாவது கண் தொடர்பு மூலம் பொதுவாகவோ குறிப்பிட்டோ சுத்தம் செய்யும் மந்திரங்களைச் சொல்லி, தூய்மைப்படுத்தி விட்டு, பிறகு சக்தியூட்டும் மந் திரங்களைச் சொல்லி, சக்தியை வேண்டும் அவர்களுக்கு அனுப் பினால், அவர்களுக்கு கோல்டன் சர்க்கிள் ஆரோக்கியமாக, ஆனந்தமாக ஐஸ்வர்யமாகப் பார்த்து, அந்த காட்சியை உத்ரேகா போட்டு, மூடிவிட்டு, ரெய்கிக்கு நன்றி கூறி, மூன்றாவது கண் தொடர் பினைத் துண்டித்து விடலாம். அடிப்படையில் இந்த முறையை வைத்துச் சரியாக ஒத்துழைக்காதவர்களுக்கும் பயன்படுத்தலாம். நேர்காணலுக்குச் செல்பவர்களுக்கும், செய்பவர்களுக்கும் இந்த முறையில் சக்தி வழங்கலாம். ரெய்கியை நல்லவிடயங்களுக்குப் பயன்படுத்தினால் நூறு சதவீதம் பலன் கிடைப்பது உறுதி.

4) ஹோசன்னா (Hosanna):   இது சுத்தப்படுத்தும் மந்திரம். இதன் மூலம் ஃடிதிடிணஞ், Living, Non-living ஆகியவற்றை சுத்தப்படுத்தலாம். நமது உடலை தூய்மைப்படுத்தவும், ஓரிடத்தை தூய்மைப்படுத்தவும் ஹோசன்னா மந்திரத்தைச் சொல்லாம். ரெய்கியானது உடலுக்கும், மனதிற்கும், வாழ்க்கைக்கிற்கும் எல்லாவிதத்திலும் எண்ணற்ற பலன்களைக் கொடுத்து பயன்படுவதால் ரெய்கி, வாழ்க்கையை வாழவைக்கும் வாழ்க்கைக் கலை என்று சொன்னால் மிகையாகாது.