சிவகங்கையின் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம்!
சிவகங்கை உருவானது ஒரு சுவாராஸ்சியான விடயம் ஆகும். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை மிகப் பெரிய காடாக இருந்தது. அப்போது சிவகங்கையை அடுத்த நாலு கோட்டையில் பளையக்காரராக இருந்த சசிவர்ண பெரிய உடையதேவர் ஒருநாள் தற்போது சிவகங்கை அமைந்துள்ள காட்டு பகுதிக்கு வந்தார். அப்போதுஅங்கு ஒரு பெரிய வேங்கை இருந்தது. அதனை கண்டு அஞ்சாமல் அவர் அங்கு சென்று பார்த்த போது, அந்த வேங்கை மறைந்துஅதற்கு பதிலாக முனிவர் தலத்தில் இருந்தார். அவரை வணங்கி ஆசி பெற்ற சசிவர்ண பெரிய உடையத்தேவர் முனிவரின் வேண்டுகோளின்படியே இந்த சிவகங்கை நகரை உருவாக்கினார்.
முனிவர் தவம் செய்த இடத்தில் மிகப் பெரிய குளம் வெட்டப்பட்டது. அந்த குளத்தில் மேற்கு பகுதி மூலையில் மன்னரது அரண்மனை அமைக்கப்பட்டது. அந்த குளம் தற்பொழுது தெப்பகுளம் என்று அழைக்கப்படுகிறது. சசிவர்ண தேவர் கட்டிய அரண்மனை இன்றும் பழைய அரண்மனை என்ற பெயரில் சிவகங்கை நகரின் கம்பீரத்தை பறைசான்றி கொண்டுள்ளது.
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில், சிவகங்கை
சிவகங்கை ராதானியின் தலைநகரமாகவும், இன்று சிவகங்கை மாவட்டத்தின் தலைநகரமாகவும் திகழும் சிவகங்கை நகரில் நடுநாயகமாக கோயில் கொண்டுள்ளது இராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் இராஜகுலத்தின் அரசுமுறை தெய்வமாக இராமநாதபுரம் சேதுபதிகளின் அரசு தெய்வமாக விளங்கிய இராஜராஜேஸ்வரிக்கு சிவகங்கை அரசு உருவான போது ராஜா சசிவர்ணரால் பிரமன் கொண்டு வரப்பட்டு சாத்தப்ப ஞானியரால் கௌரி பஞ்சாட்சர மந்திர பிரதிஷ்டை செய்யப் பெற்றது. மன்னர் அவர்கள் முத்துவிஜய ரகுநாத கௌரி வல்லம்பர்” என்ற மகுடத்துடன் அழைக்கப்பட்டார். அத்தகு அடைமொழியுடன் இராஜாங்கம் தொடர்கிறது. இவர் கி.பி.1730 முதல் 1750 வரை ஆட்சி செய்த பெருந்தகை
சாத்தப்ப ஞானியார் அவர்களின் தவக்குடிலாக விளங்கிய வெள்ளை நாவலடி ஊற்றில் சிவகங்கை திருக்குளம் ஏற்படுத்தினார். தன் தலைநகரை சிவகங்கை எனவும் அழைத்தனர். இதற்கு முன்பாக இச்சிற்றூர் குளந்தாபுரி என அழைக்கப்பட்டது. மன்னர் சசிவர்ணர் இராணி அகிலாண்டேஸ்வரி நாச்சியார் அதன்பின்னர் வந்த மன்னர் பெருமக்கள் தன் குடும்ப தெய்வமாக போற்றி வழிபட்டனர்.
இராணிவேலு நாச்சியார் அவர்கள் மைசூர் ஹைதர் அலி மன்னர் அவர்களிடம் அரசியல் தஞ்சம் புகுந்து சிவகங்கையை மீட்ட போது மன்னர் ஹைதர்அலி, இராணி வேலுநாச்சியாரின் வீரத்தை மெச்சி ஸ்ரீசிருங்கேரிசாரதா பீடாதிபதியின் பூரண ஆசியுடன் “உலோக திருமேனி கொண்ட இராஜராஜேஸ்வரி விக்கிரம் பிரதிஷ்டை ஏற்பாடு செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. அது மூலமாக ஸ்ரீசிருங்கே திருமட அறிவுரையின்படி வைதீக முறை்பபடியும் தற்போது ஆக முறைப்படியும் ஸ்ரீசக்கர பிரதிஷ்டையுடன் பூஜைகள் நடந்து வருகின்றன.
ராஜகுடும்பத்தின் சொந்த கோயிலாக இருந்ததை, மேதகு மன்னர் கார்த்திகேயர் பொதுமக்கள் வழிபாட்டுக்கு உட்படுத்தியும் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்தில் பூஜை திட்டங்கள் ஏற்படுத்தி நித்திய பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மைசூர் தசரா விழாப்போல சிறப்பாக கலை வளர்க்கும் விழாவாக நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுகிறது.
- S.L.S. பழனியப்பன்