மறுபிறவி பற்றி கருட புராணம்!

மறுபிறவி பற்றி கருட புராணம்!

சிலம்பு மணிமேகலை போன்ற இலக்கியங்களில் மறுபிறவி பற்றிய நம்பிக்கைகள் இருப்பதைப் பார்த்தோம். மனிதன் இந்த உலகத்தில் பிறக்கிறான் - ஆசையின் பிடியில் சிக்கி காரியங்களைச் செய்கிறான். அவற்றில் நல்ல காரியங்களும் அடங்கும். கெட்ட காரியங்களும் அடங்கும். இவ்வாறு சேர்த்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவன் இறந்த பிறகு சொர்க்கமோ அல்லது நரகமோ கிடைக்கிறது. அவற்றில் சென்று சிலகாலம் தங்கி அந்த இன்பத்தையோ அல்லது கொடுமைகளையோ அனுபவிக்கிறான். பிறகு தனது எஞ்சிய கர்மாவைக் கழிக்க மீண்டும் பிறவி எடுக்கிறான் என்கிறது கருட புராணம்.

 
மறுபிறவி பற்றி கருடபுராணம் மிகத் தெளிவாக பல விதமான தகவல்களைத் தெரிவிக்கிறது. மர ணத்திற்குப் பிறகு ஆத்மா எங்கே செல்கிறது. எப் படிச் செல்கிறது. என்னவெல்லாம் துன்பங்களை அனுபவிக்கிறது என்று அது பட்டியல் இட்டுக் காட்டுகிறது. அவைகளைப் படித்தால் நிச்சயமாக இந்த உலக வாழ்க்கையில் பாபம் செய்யலாம் என்ற எண்ணமே ஏற்படாது.
 
கருடபுராணம் சொல்லும் சில மறுபிறவிக் கருத்துக்களைக் கீழே காணலாம். நாம் எடுக்கின்ற பிறவிக்கு நாமே காரணம். ஆனால் நம்மில் பலர் கடவுளே என்னை ஏழையாகப் படைத்து விட் டாயே? உனக்கு கருணையே இல்லையா என்று புலம்புகிறோம்.
 
ஒவ்வொருவருக்கும் தாங்க முடியாத துன்பங் களும் தோல்விகளும் சில நேரங்களில் ஏற்படத்தான் செய்கின்றன. அந்த நேரங்களில் பகவானே எனக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை என்று சொல்லி ஏதோ அவர் தான் அந்தத் துன்பங்களைக் கொடுத்ததைப் போல குற்றம் சொல்கிறோம்.
 
இவைகள் தவறான சிந்தனைகள் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே நமக்கு மறு பிறவி வாய்க்கிறது. 
 
இந்தப் பிறவியில் சிலர் பிச்சைக்காரர்களாக தெருவில்  திரிகிறார்களே அதற்கு என்ன கார ணம் தெரியுமா? மேலும் சிலர் எத்தனை தான் உழைத்தாலும் பொருளாதார முன்னேற்றம் அடை யாமல் வறுமையில் சிக்கித் தவிக்கிறார்களே அதற்கு என்ன காரணம்? கருடபுராணம் சொல் கிறது. பூர்வ ஜென்மத்தில் பிறர் சொத்துக்களை அபகரித்தவன், பிறரை ஏமாற்றி வாழ்க்கை நடத்தியவன் ஆகியவர்களே இந்தப் பிறவியில் பிச்சைகாரனாகவும் கொடுமையான வறுமையிலும் இப்படி பிறந்து தான் பட்ட கடனை அடைக்கிறார்கள்.
 
விருந்தினரை வெளியே காக்கவைத்துவிட்டு தான் மட்டும் சாப்பிடுபவன். சாப்பிடும் போது பிறருக்கு கொடுத்துவிட்டு சாப் பிடாதவன், பிறர் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் இப்படிப்பட்டவன் அடுத்த பிறவியில் காகமாகப் பிறப்பான். ஒருவேளை உணவுக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிவான். எங்கேயாவத சோறு கிடைக்குமா என்று காத்துக் கொண்டிருப் பான்.
 
மற்றவர்களின் வசதி யான வாழ்க்கையப் பார்த்து பொறாமை கொள்பவன், அதையே எண்ணி புழுங்குபவன், மற்றவர் வாழ்க்கை யில் புகுந்து கெடுப்பவன், குடும்பங்களைப் பிரிப்பவன், நல்லவர்களுக்கு இடையே பகைமூளச் செய் தவன், சதி செயல்கள் செய்து பிறர் வயிற்றெரிச் சலைக் கொட்டிக் கொள்பவன் இப்படிப்பட்டவர்கள் அடுத்த பிறவியில் குரங்காகவும் நாயாகவும் பிறப் பது உறுதி.
 
தாயைப் பழித்தவனும், பிற பெண்களின் மீது பழிச்சொல்லைச் சொன்னவனும், ஒழுக்கமாக வாழ் பவர்களை கேலி செய்து பழி சொன்னவனும், பிறர் வீட்டுக்குத் தீயிட்டுவிட்டு எதுவும் தெரியாதவனைப் போல நடித்தவனும் மறுபிறவியில் வாய்பேச முடியாத ஊமையாகப் பிறப்பது உறுதி. இந்தக் காலத்தில் நல்ல மனிதர்களைப் பார்த்து அவ ரைப் பத்தி எனக்குத் தெரியாதா என்று கேலி பேசு பவர்களும், கோள்மூட்டி பதவி உயர்வு பெறு பவர்களும் இந்த விடயத்தைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கருடபுராணத்தின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தாமல் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
 
மேலும் காட்டில் உடும்பு இருக்கிறதே அது யார் தெரியுமா? பொய்சாட்சி சொன்னவன். கோயில் சொத்தை திருடியவன், பிறரது சொத்துக்களைக் கொள்ளை அடித்தவன், ஆகியோர் பிடித்ததை விடாத உடும்பாகப் பிறந்து மரக்கிளையில் வாசம் செய்வார்கள். அதுவே அவர்களுக்கு உரிய தண் டனை என்கிறது கருடபுராணம். 
 
“சிவன் சொத்து குலநாசம்” என்று படித்து விட்டு “ஆமாம்” என்று ஆமோதித்து விட்டு சிவன்கோவில் சொத்துக்களை ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும் எத்தர்களுக்கு இது ஒரு அபாய அறிவிப்பு.
 
ஊருக்குப் பயன்படும் கிணறு, குளம் ஆகிய வற்றை அடாவடியாக தூர்த்தவன் அடுத்த பிறவி யில் மீனாகப் பிறந்து கஷ்டப்படுவான்.
 
பிறருக்குவிடம் கொடுத்துக் கொன்றவன் அடுத்த பிறவியில் பாம்பாகப் பிறவி எடுப்பான். மற்றவர்களைக் கண்டாலே வெறுப் பவன், எரிச்சல்படுபவன், ஆத்திரம் கொண்டு விரட்
 
டுபவன் ஆகியோர் அடுத்த பிறவியில் ஆந்தை யாகப் பிறந்து, மனிதர் நடமாடாத காட்டில் தனி யாக வாழ்வார்கள்.
 
ஏமாற்றிப் பிழைத்து வாழ்பவன் நரியாகவும், எருதாகவும் பிறப்பது உறுதி.
 
தனது தீய செயல்களின் மூலமாக பெண்களின் சாவுக்குக் காரணமாக இருந்தவன் மறுஜென்மத்தில் பைத்தியமாகப் பிறந்த தெருக்களில் அலைந்து திரி வான்.
 
இவ்வாறெல்லாம் பாவங்கள் குறித்தும், அதன் தொடர்ச்சியாக வரப்போகும் மறுபிறவி குறித்தும் பலவிதமான எச்சரிக்கைத் தகவல்களைக் கருட புராணம் தெரிவிக்கிறது.
 
வேணு சீனிவாசன்