தோஷம் எனப்படுவது யாது?

தோஷம் எனப்படுவது யாது?

“தோஷம்” என்பது சமஸ்கிருத வார்த்தை. ஜோதிட சாஸ்திரத்தில் தோஷம் எனும் சொல் அதிமுக்கியமாக வழங்கப்பட்டு வருகிறது. தோஷம் என்றால் குறைபாடு என பொருள்படும். பலக்குறைவு, குணக்குறைவு, சுப பலனைத் தரும் தகுதிக் குறைவு இப்படியாக எல்லாக் குறைபாடுகளும் தோஷம் தான். நன்மைக்கு குறைபாடு தருவது தோஷம் என்கிற போது தீமைக்கு வளர்ச்சி தருவதும் தோஷம் தான். இந்த தோஷம் நல்லதுக்கு குறுக்கீட ஆகும். எதிர்மறையான விளைவுகளைத் தந்து உடன்பாடான சாதகங்களை அழிக்கும் ஆற்றலுடையது தோஷம் என்பதாகும்.
 
ஒரு கிரகம் நீசம் அல்லது பகை விடுகளில் இருந்தால் பலம் குறையும். அப்படிக் குறைந்த பலம் கொண்ட கிரகங்களான தோஷம் உடையவர்களாவார்கள். 6, 8, 12 ஆம் இடங்களில் கிரகங்கள் இருந்தால் “தோஷம்” உடையவர்களாகவார்கள். ஏனெனில் இந்த இடங்கள் துஸ்தானங்கள் ஆகும். இதற்கும் விதி விலக்கு உண்டு. ஆறாம் இடத்தில் பாபக்கிரகங்கள் இருந்தால் தோஷமில்லை. எட்டாம் இடத்தில் உள்ள ஒரு கிரகம் யோகத்தைத் தரக்கூடிய பலத்தைப் பெறுமானால் அப்போது அதற்கும் தோஷம் ஏற்படாது. இதுவும் ஒரு விதிவிலக்கு ஆகும்.
 
சம தோஷம்
 
ஜோதிட சாஸ்திரத்தில் “சமதோஷம்” என்று ஒரு சொல் வழக்கு தொன்று தொட்டு வழங்கி வருகிறது. அதாவது ஆண், பெண் இருவர் ஜாதகங்களில் குறிப்பிட்ட தோஷம் சமமாக இருப்பின் அதற்கு சமதோஷம் என்று பெயர். அங்காரகன் என்று அழைக்கப் பெறும் செவ்வாயால் ஏற்படக் கூடிய தோஷத்தைப் பலமான தோஷம் என்கிறோம்.
 
ஜாதகத்தில் ஏழில் செவ்வாய் இருந்தால் சப்தம் (அங்காரகன்) செவ்வாய் என்றும் அது பலமான தோஷமாகப் படுகிறது. அதே போல் எட்டில் செவ்வாய் இருந்தால் அஷ்டம செவ்வாய் எனவும், அதுவும் பலம் வாய்ந்த தோஷமாகக் கருதப்படுகிறது.
 
ஏழு, எட்டாம் இடங்களில் ஓர் ஆண் ஜாதகத்தில் செவ்வாய் இருந்தால் அவ்வாறே பெண் ஜாதகத்திலும் செவ்வாய் இருக்க வேண்டும். அப்போது தான் செவ்வாயால் ஏற்படும் தோஷம் சமதோஷம் என்று ஏற்றுக் கொள்ள முடியும். ஏழாம் இடத்தில் பெண் ஜாதகத்தில் செவ்வாய் இருந்து ஆண் ஜாதகத்தில் இலக்கனம். இரண்டு நான்கு, பன்னிரண்டாம் இடங்களில் ஒன்றில் செவ்வாய் இருந்தால் அதனைச் சமதோஷம் என்று கூறிவிட முடியாது.
 
ஒருவருக்குப் பலமான தோஷம் இருந்து. மற்றவருக்குப் பலம் குறைந்த தோஷம் என்றால், அதனை சமதோஷமாகக் கருத முடியாது. ஒருவரின் தோஷம் அதிகமாக இருந்த மற்றவருக்குக் குறைவானால், அதிகமான தோஷமுள்ளவரின் தோஷம் கொஞ்சம் குறையும் எனலாம்.
 
செவ்வாய் உச்சமாகவோ ஆட்சியாகவோ நல்ல ஆதிபத்தியம் பெற்றோ சுபக்கிரகங்களுடன் சேர்ந்தோ, சுபக்கிரகங்களால் பார்க்கப்பட்டோ இருக்குமானால் செவ்வாய் தோஷம் விலகிவிடும் அல்லது மிகவும் குறைந்து விடும்.
 
மேலும் செவ்வாய் குறிப்பிட்ட எண்ணுள்ள வீடுகளில் இருப்பதை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க கூடாது. அந்த வீட்டில் இருப்பதால் தோஷம் உள்ளதா இல்லாமல் போகிறதா என்பதனையும் கவனிக்க வேண்டும்.
 
ஆண் மகன் ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் வீட்டதிபதி பலமாக அமைந்து களத்திர காரகன் சுக்கிரனும் பலமாக அமைந்து அவருடைய மனைவி தீர்க்காயுள் இருக்க வேண்டும் என்று விதி அமைந்து இருந்தால் செவ்வாய் தோஷம் பாதிக்காது. அதாவது செவ்வாய் தோஷம் மனைவியின் ஆயுளை பறித்து விடாது.
 
இப்படிப்பட்ட ஆண்மகன், செவ்வாய் தோஷம் பெற்றிருந்து, இவர் மணக்கும் பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் இல்லாமல் இருந்தால், சமதோஷம் இல்லாமல் போகும் என்பது உண்மை தான். சமதோஷம் இல்லை என்னும் போது புருஷனுடைய ஜாதக செவ்வாய் தோஷம் மனைவியைப் பாதிக்கும் என்பது தான் முறை. ஆனால் புருஷனுடைய ஜாதகத்தில் மனைவி தீர்க்காயுள் வாழ வேண்டும் என்று, மற்ற காரணங்களால் முடிவு ஏற்படுவதால், அந்தச் செவ்வாய் தோஷம் மனைவியைப் பாதிக்காது என முடிவு செய்தல் கூடாது.
 
ஜாதகருக்கு செவ்வாய் திசை, புத்திகள் வரும் போது மனைவியின் உடல் நலம் பாதிக்கலாம். ஒற்றுமையைச் சிதைக்கலாம். கருத்து வேறுபாட்டை உண்டாக்கலாம். பின்பு அடுத்த திசை, அடுத்த புத்தி வரும் போது அந்த நிலை மாறுபட்டு சீர்படக் கூடும்.

செவ்வாய் தோஷத்திற்கு விதிவிலக்குகள்
 
ஆண் பெண் ஜாதகங்களில் ஜன்ம இலக்கனத்தில் இருந்த, சந்திர இலக்கனத்தில் இருந்து. சுக்கிரன் இருக்கும் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் தோஷம் உண்டு. அந்த இரண்டாம் இடம் மேஷம் அல்லது விருச்சிகமானால் தோஷம் கிடையாது. மேஷமும், விருச்சிகமும் செவ்வாய்க்கு ஆட்சி வீடுகளாக அமைகிற காரணத்தால் தோஷ விலக்கு ஏற்படுகின்றது.
 
மகரம் எட்டாமிடமாகி அவற்றில் செவ்வாய் இருந்தால் எட்டாமிடத்து செவ்வாய் தோஷம் விலகிவிடும். ஏனெனில் மகரம் செவ்வாய்க்கு உச்ச வீடாக அமைகிற காரணம் ஆகும்.
 
தேவ கேரளம் என்னும் ஜோதிட நூலின் ஆசிரியர் சிம்ம இராசியிலும், கும்ப இராசியிலும் செவ்வாய் இருப்பின் செவ்வாய் தோஷமே கிடையாது என்று கூறியிருக்கிறார்.
 
ஆண், பெண் ஜாதகங்களில் மேஷம், கடகம், விருச்சிகம், மகரம் ஆகிய நான்கு இடங்களில் ஏதாவது ஒன்று நான்காம் வீடாகவோ அல்லது ஏழாம் வீடாகவோ அமைந்த அவற்றில் ஒன்றில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் கிடையாது. இந்த செவ்வாயைச் சுபக்கிரக தோஷம் கிடையாது. இந்த செவ்வாயைச் சுபக்கிரக வரிசையில் சேர்த்துப் பார்க்கலாம்.
 
- டொக்டர் கச்சனம் நடராஜன்