ஜோதிடம் என்பது பகவத் சாஸ்திரம்

ஜோதிடம் என்பது பகவத் சாஸ்திரம்

“தேரான் தெளிவும் தெளிந்தார்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்” என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க, நாம் ஒன்றின்மீது நம்பிக்கை வைத்தோமானால், நாம் சந்தேகப்படக் கூடாது. சந்தேகப்பட்டால், நம்பக் கூடாது. இவற்றைச் செய்யாவிடில் நமக்குத் துன்பம்தான். முன்னர் கூறியது போல, ஜோதிடம் என்பது பகவத் சாஸ்திரம். நமது வாழ்க்கையின் குறிப்புகளை அறிந்து கொள்ள கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்டது இந்த சாஸ்திரம். எந்தக் காரணத்தைக் கொண்டும் இதை இகழக் கூடாது.

 
ஒரு மருத்துவர் போலி என்றால், அனைவரும் போலியா? இல்லையே! அது போல, ஒரு சில போலிகளை வைத்து எல்லோரையும் எடை போடாதீர்கள்.
 
தற்போது, பல பேர் ஜோதிடரிடம் ஏன் செல்கிறார்கள் என்றால், எப்படி ஒரு நோயாளி மருத்துவரிடம் செல்லுகிறாரோ அது போலத்தான். இப்போது நாம், நமது கடமைகளை சரிவரச் செய்வதில்லை.
 
நமது முதல் கடமையான தாய் தந்தையரை சரிவரப் பார்த்துக் கொள்வதில்லை. நமது தொழிலில் உண்மை இல்லை. நமது சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லை. இப்படிப் பல தோஷங்களினால் பாதிக்கப்பட்ட மனிதன், ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு தன்னால் இயன்றது இவ்வளவுதான், இனிக் கடவுள்தான் என்று எப்போது உணருகிறாரோ, அப்போது கடவுள் கொடுத்த ஜோதிட சாஸ்தி ரத்தை நோக்கி வருகிறார்.
 
எப்படியாவது நமக்கு வழி பிறக்காதா என்ற நம்பிக்கை. ஒரு ஜோதிடரும் தன்னுடைய தபோ பலத்தினாலும் கணக்குகளினாலும் தான் அறிந்தவற்றைக் கூறுகிறார். 
 
அவர் கூறும் விஷயங்களை நன்றாகக் கவனித்து அதன்படி நாம் பக்தியுடன் கிரியைகளைச் செய்தோமானால், கண்டிப்பாக ஒரு வழி பிறக்கும்.