சூர்ய நமஸ்காரம் தேஜஸை தரும்!

சூர்ய நமஸ்காரம் தேஜஸை தரும்!

சூரிய வழிபாடு மிகத் தொன்மையானது. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சூரிய வழிபாடு இருந்து வந்திருப்பது ஆய்வுகள் வாயிலாக அறியப்படுகின்றன. சூரியன் மெய்ப்பொருள் என்பது எசவுர மதத்தின் அடிப்படைத் தத்துவமாகும். ஆதிசங்கரர் வகுத்தளித்த ஆறு வழிபாட்டு முறைகளில் சூரிய வழிபாடு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றது. அது மட்டுமின்றி நாம் கண்களால் பார்க்கக் கூடிய ஒரே தெய்வம் சூரியன். இத்தகைய சிறப்புகளை கொண்ட சூரியன் உலகம் முழுவதும் வியாபித்திருக்கின்றான். மூல தத்துவத்தின் பிரதிநிதியாக இருப்பதால் சூரிய நாராயணன் என்றும் பகலில் உதிப்பதன் காரணமாக பகலவன் என்றும் கதிர்களை வீசி உயிர்களை இன்புறச் செய்வதால் கதிரவன் என்றும் போற்றப்படுகின்றான். சூரியன் உள்ள ஹைட்ரஜன் ஹீலியமாக மாறிக் கொண்டே இருப்பதால், அதற்கு அதிக சக்தி உண்டாகிறது. சூரியனுக்கு ஈர்ப்பு சக்தி அதிகம் இந்த சூரிய சக்தியைத்தான் விஞ்ஞானிகள் உலகிற்குப் பயன்படும் சக்தியாக மாற்றி, பல வெற்றிகளை அடைந்துள்ளனர். சூரியசக்தியில் இருந்து எரிசக்தி, மின்சக்தி போன்றவற்றை இந்த பூவுலகம் பெற்று பயன்படுத்தி வருகிறது என்பது இன்றைய நடைமுறையில் நாம் காணும் நிகழ்வாகும். 

 
சூரிய காயத்திரி மந்திரம்

"ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாத்யதிகராய தீமஹி
தந்நோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்”
 
பொருள் - பாஸ்கரனை அறிவோமாக, ஒளியைத் தருபவனாகிய அவன் மீது தியானம் செய்கிறோம். ஆதித்தனாகிய அவன். நம்மை காத்து அருள் புரிவானாக.