இறைவனுடன் இணைவதே மந்திரமாகும்
மந்திரம் என்பது நமக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு பாலமாக அமைகிறது என்பது ஆன்றோர் கருத்தாகும். நம்மைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்று தெரியாத ஒரு நிலையில் நாம் இருப்பதைத்தான் “மந்திர வயப்படுதல்” என்கிறோம். நம்மை மறந்த நிலையில் இறைவன் அல்லது இறைவியின் திருநாமத்தை உச்சரித்த வண்ணம் இருக்கும் நிலையில் அதாவது மனதை ஒருமுகப்படுத்திய நிலையில்தான் நாம் இறைவனுடன் இணைந்து விடுகிறோம்.
மந்திரங்கள் அனைத்துமே அதிகச் சக்தி வாய்ந்தவையாகும். அதிலும், தேவியைப் புகழ்ந்து உரைத்துப் போற்றும் மந்திரங்கள் இன்னும் அதிகச் சக்திமிக்கவையாகும். நமது முன்னோர்களால் கூறப்பட்ட மந்திரங்கள் இறையருள் பெற்றவர்கள் எழுதி வைத்துச் சென்ற மந்திரங்கள் அனைத்துமே நம்மைக் காப்பாற்றும் அதிக ஆற்றல் பெற்றவையாகும்.
எந்த நிலையிலும் நாம் பயமின்றி வாழ்வதற்கு, நமக்கு ஏற்படும் எல்லா விதமான துன்பங்களையும் அறவே போக்குவதற்கு இந்த மந்திரங்கள் துணை புரிகின்றன. இறைவன் அல்லது இறைவியின் நாமத்தை உச்சரிக்க உச்சரிக்க நம்மையறியாமல் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு அகலும். இறைவழிபாட்டின் மிக முக்கிய அம்சம் மந்திரம் உச்சரித்தல் என்பதாகும்.
மந்திரங்களின் கடைசிச் சொல்லாக “ஹ்ரீம்” விளங்குகிறது. இதை “மாயா பீஜம்” என்றும் கூறுவார்கள் இதுதான் மந்திரங்களுக்கெல்லாம் வித்தாக கருதப்படுகின்றது. இந்த “ஹ்ரீம்” என்ற ஒலி அன்னையாம் தேவிக்கு மிகவும் பிடித்தமான விருப்பமான ஒலியாகும். இந்த ஹ்ரீம் என்பது நான்கு எழுத்துக்களைக் கொண்டதாகும்.
முதல் எழுத்தான் ஹ என்பது சிவனையும்
ரா என்ற இரண்டாம் எழுத்து சக்தியையம்
இ என்ற மூன்றாம் எழுத்து எங்கும்
வியாபித்து நிற்கும் விஷ்ணுவையும்
ம் என்ற நான்காம் எழுத்து
அழித்தல் என்ற நிலையையும் குறிப்பதாகும்.
ஆக ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற மூன்று நிலைகளையம் சக்திகளையும் குறிக்கிறது இந்த ஹ்ரீம் எனலாம். ஹ்ரீங்காரா லக்ஷணா என்று தேவியாம் அன்னை போற்றப்படுவது இங்குக் குறிப்பிடத்தக்கது. இதைப் போன்று சௌம் ஓளம் ஹெனம், கிரீம், கௌம், ஐம், இரீம், திரீம், கிலீம் ஆகிய இந்த ஒன்பது சொற்களையும் கொண்டு சிறப்பது தான் சிறந்த ஒப்பற்ற மந்திரமான சிவாயநம என்பதாகும்.
சௌ முதல் அவ்வோடு ஹௌவுட ளாங்கிரீம்
கௌவு ளூமையுளுங் கலந்திரீம் கிரீமென்
றொவ்வில் எழுங்கிலீ மந்திர பாதமாச்
கெவ்வுள் எழுந்து சிவாய நமவென்னே
என்று திருமந்திரத்தில் குறிப்பிட்டிருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மணி
கொம்பன்னை நுண்ணிடை கோதை குலாவிய
செம்பொன் செய் யாககை கெறிகமழ் நடைடொறும்
நம்மனை நோக்கிநவிலுகின் றானே
நவிலும் பெருந்த்தெ்யவம் நான்மறைச் சத்தி
துகிலுடை யாடை நிலம்பொதி பாதம்
அகிலமும் அண்டு முழுதுஞ் செம்மாந்தும்
புகலுமுச் சோதி யுனையை நிற் பாளே”
என்றெல்லாம் இறைவியின் சிறப்பைக் குறிப்பிட்ட திருமூல நாயனார். இந்த உலகத்து உயிர்கள் அனைத்திடமும் அன்பு கொண்ட இறைவி, அவை அனைத்தும் சிறப்புறத் திகழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவதாகக் கூறுகிறார்.
ஆற்றல் தரும் மந்திரங்கள்
இந்தப் பகுத்தறிவு நூற்றாண்டில் “மந்திரம்” என்பது சற்று மதிப்பிழந்துதான் காணப்படுகிறது. இதற்குக் காரணம் நம்பிக்கை இல்லாமைதான். எதையுமே நம்பிக் கையுடன் செயல்பட்டால்தான் பலன் கிடைக்கும். “ஸ்ரீராமா ஜெயராமா, ஜெய ஜெய ராமா” என்பது ஒரு தாரக மந்திரமாகும். இதைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது பேரமைதி கிடைக்கிறது. மனம் பக்குவப்படுகிறது.
“ரா...மா...” என்பதை “ரா” என்றும், “மா” என்றும் பிரிக்க வேண்டும். “ரா” என்பது சூரிய சக்தியாகும். “மா” என்பது சந்திர சக்தியாகும்.
“ரா” என்ற சூரிய சக்தி ஆண்மை மிக்கது.
“மா” என்ற சந்திர சக்தி பெண்மை மிக்கது.
முதுகெலும்பின் வலது புறமாக பிங்கள நாடியில் கலந்து நிற்பது ஆண்மையுள்ள சூரிய சக்தியாகும். முதுகெலும்பின் இடது புறமாக இடது நாடியில் கலந்து நிற்பது சந்திர சக்தியாகும். ஆக, “ராமா”, “ராமா” என்று ஸ்ரீராமபிரானின் திருநாமத்தை உச்சரித்த வண்ணம் இருந்தால் சூரிய சக்தியும், சந்திர சக்தியும் கூடுகின்ற வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்விதம் கூடுகின்றபோது “அமைதி” ஏற்படுகின்றது.
மந்திரங்களை உச்சரிக்கும் முறை மந்திரங்களை உச்சரிப்பதில் கவனம் தேவை. மந்திரங்களைப் பொறுத்தவரையில் ஏற்ற இறக்கம் கொடுத்து உச்சரிப்பதில்தான் அதிகச் சக்தி - அதாவது பலன் இருக்கிறது என்று தெளிவுபடக் கூறலாம். ஒவ்வொரு விதமான சப்தத்திற்கும் ஒவ்வொரு விதமான “அசைவு” உண்டென்பது பௌதிகக் கருத்தாகும். இந்த அடிப்படையில் உச்சரிக்கப்படுகின்ற ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு விதமான “அசைவு” ஏற்பட்டு இந்த அசைவின் மூலம் உடல், உள்ளம் ஆகியவை நலம் பெறுகின்றன.
இதர பொதுப்படையான நன்மைகளைத் தரும் மந்திரங்களும் இந்த அடிப்படையில் தானுள்ளன. உச்சரிப்பு சுத்தமாக இல்லாவிட்டால் அட்சரங்கள் எதிர்பார்த்த பலனைத் தராமல் போய்விடும் என்று வேத விற்பன்னர்கள் குறிப்பிடுவதில் பொருள் உண்டு. நல்லவைகளே நடப்பதற்குரிய சப்தங்களும் கெட்டவைகள் நடப்பதற்குரிய சப்தங் களும் உண்டு என்ற வேத விற்பன்னர்கள் கூறுகிறார்கள். எனவே நல்லவைகளுக்கு என்ன சப்தம் - அதாவது எவ்விதம் உச்சரிக்க வேண்டும். எவ்விதம் தொனியை எழுப்ப வேண்டும் என்று தெரிந்து கொண்டு உச்சரிப்பது சிறந்ததாகும்.
ஆபஸ்தம்பன்