உடனடி பலன் தரும் ஓரை

தன்னுடைய அற்புதமான வீடியோ பதிவின் மூலமாக, பேரருள்மிகு சித்தர் மெய்கண்டத் தேவர் ஓரையைப் பயன்படுத்தி நம்முடைய அன்றாட அலுவல்களில் எவ்விதமாக வெற்றி பெறலாம் எனத் தெளிவாக விளக்கியுள்ளார். தன்னுடைய மானசீக குருவான காவிரி ஆற்றங்கரைக் கருவூரார் அவர்களை முன்னிலைப்படுத்தி திரு.மெய்கண்டத் தேவர் ஓரை பற்றியதான அரிய மற்றும் பயனுள்ள தகவல்களை வெளியிட்டுள்ளார்.
 
ஓரைகள், கோள்கள் போல் அல்லாது எண்ணிக்கையில் ஏழு உள்ளன என்றும், ஓரை பார்த்துச் செய்யக் கூடிய வேலைகள் எல்லாமே வெற்றியைத் தரும் என்றும், எந்த ஒரு முக்கியமான விஷயத்தைத் துவங்குவதற்கு முன்பாகவும் அந்த நாளில் ஓரை சேர்ந்து வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்மெனவும், ஓரையைப் பயன்படுத்தும்போது சோதிடர் மூலமாக தெளிவுபடுத்திக்கொண்டு செய்யலாம் எனவும், மேலும் ஓரையைப் பயன்படுத்தும்போது சூரிய உதயத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் திரு. மெய்கண்டத் தேவர் அவர்கள் விளக்கங்கள் அளித்திருக்கின்றார்கள். “ஓரை வெற்றியையே தரும்” என்பதையும் வலியுறுத்தியிருக்கின்றார்.
 
பயனுள்ள இந்த வீடியோ பதிவினைப் பாருங்கள், பலன் பலவற்றையும் பெற்றிடுங்கள்! உங்களின் மேலான கருத்துக்களையும் தெரிவியுங்கள்!