கெட்ட சக்திகளை விரட்டும் கருப்புக் குதிரை லாடம்

குதிரை லாடத்தைப் பயன்படுத்தினால் கிடைக்கப்பெறும் பலன்கள் பற்றி தன்னுடைய வீடியோ பதிவின் மூலமாக சேலம் சித்தர் கருங்காலி ஆராய்ச்சியாளர் அவர்கள் (நவகோடி சித்தர்கள் ஆன்மீக சேவை மையம்) அற்புதமாக எடுத்துக் கூறியுள்ளார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பாக மக்களும் மன்னர்களும் குதிரை லாடத்தை தம்முடைய வசிப்பிடத்தில் வைத்து பில்லி, சூன்யம் மற்றும் இதர தீய சக்திகளிலிருந்தும் தம்மைத் தற்காத்துக் கொண்டார்கள் என்றும், இன்றும் கூட சில கிராமங்களில் இது வழக்கத்தில் இருந்து வருகிறது என்றும், நாகரிகத்தை முன்னிட்டு இது நகர்ப்புறங்களில் முழுவதுமாக தவிர்க்கப்பட்டு வருகிறது என்றும் தம்முடைய பதிவில் விளக்கியிருக்கிறார்கள்.
 
கருப்புக் குதிரையின் வலது கால் லாடத்திற்கு, தீய சக்திகளை விரட்டும் திறன் அதீதமாக உள்ளது என்றும், அதனை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் இட்டு வீட்டின் வடகிழக்கு மூலையில் வைத்தால் தீய சக்திகள் எல்லாம் விரட்டப்படும் என்றும், வெள்ளிக்கிழமையில் கருப்புக் குதிரைக்கு கொல்லு வாங்கிக் கொடுத்தால் வேலை வாய்ப்புக்களில் சாத்தியக் கூறுகள் பெருகும் என்றும் விளம்புகின்றார்.
 
மிகவும் பயனுள்ள இந்த வீடியோ பதிவைப்பார்த்து பலனடையுங்கள், உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்!