நவம்பர் மாத ராசி பலன்கள் - 01.11.2021 முதல் 30.11.2021 வரை - விருச்சிகம்

நவம்பர் மாத ராசி பலன்கள் - 01.11.2021 முதல் 30.11.2021 வரை - விருச்சிகம்

மனவலிமையும், நேர்மையும் கொண்டு விளங்கும் விருச்சிக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு மூன்றில் யோக சனியும், தனஸ்தானத்தில் களத்திர விரையஸ்தானாதிபதியும் அமர்வதும் வெளிநாடு செய்ய நீங்கள் எடுக்கும். முயற்சிகளும், விசா கிடைக்காமல் தாமதமானவர்களுக்கு விரைவில் விசாவும் கிடைக்க பெறுவீர்கள். ராசிநாதன் சனியை பார்ப்பதும் சனி ராசிநாதனை பார்ப்பதும் போட்டிகளை கண்டு மன தளராமல் எதிர்கொண்டு செயல்படுவீர்கள். சரியான நேரத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வீர்கள். மகிழ்ச்சியான சம்பவங்கள் உங்களின் அன்றாட நிகழ்வுகளில் வந்து போகும். எதையும் காரியத்துடனும், எளிய முறையிலும் செயல்படுத்துவீர்கள். நவீன தொழில் நுட்ப பணிகளில் பணி செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். வசதிகளை வளர்த்து கொள்வீர்கள். காரிய அனுகூலம் கிடைக்கும். பொருளாதாரம் மேலும் மேம்படும்.
 
சந்திராஷ்டம நாட்கள்: 
 
21.11.2021 ஞாயிறு இரவு 08.58 முதல் 24.11.2021 புதன் காலை 08.10 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:
 
விசாகம் 4ம் பாதம்:
 
குடும்ப சுமைகளை இறக்கி வைத்துவிட்டு உங்களின் செயல்களை விரைவுபடுத்துவீர்கள். தொலை தூர பயணம் உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழில் சிறக்கும்.
 
அனுசம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
தெரிந்த தொழிலை செய்வது சிறப்பு. ஆசை வார்த்தை சொல்லி உங்களை தெரியாத தொழிலுக்கு அழைக்கும் நபர்களிடமிருந்து ஏமாறாமல் இருப்பது உங்களுக்கு நல்லது.
 
கேட்டை 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். புதிய நண்பர் சந்திப்பு உங்களுக்கு திருப்புமுனையாக அமையும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். கல்வியில்  சிறந்து விளங்குவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: ஓரஞ்சு, வெண்மை, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, தென் கிழக்கு, மேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி, சனி.
 
இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய்கிழமை ராகு காலத்தில் சுப்ரமணியர் வழிபாடு செய்து சிவப்பு நிற பூ வைத்து வேண்டுதல் செய்ய உங்களின் தொழிலிலும், உத்தியோகத்திலும் சகல காரியமும் மேன்மை அடையும்.