நவம்பர் மாத ராசி பலன்கள் - 01.11.2021 முதல் 30.11.2021 வரை - துலாம்

நவம்பர் மாத ராசி பலன்கள் - 01.11.2021 முதல் 30.11.2021 வரை - துலாம்

ஆர்வமுடன் எதையும் செயல்படுத்த நினைக்கும் துலாம் ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு சனி பார்வையுடன் குரு பார்வையும் இணைந்திருப்பதும் குரு பெயர்ச்சிக்கு பின்பு அமைவது உங்களுக்கு நல்ல பலனை கிடைக்க பெறுவீர்கள். அர்த்தாஷ்டம சனியாக இருந்தாலும் குரு பார்வை பெறும் போது அதன் தாக்கம் எதையும் செய்யாது. எதையும் திட்டமிட்டு செயல்படும் உங்களின் செயல்பாடுகள் தடையின்றி நடக்கும். குறுகிய காலத்தில் செய்ய வேண்டிய காரியங்கள் சற்று தாமதத்துடன் நடக்கும். அரசியலிலும், அரசாங்க பணிகளிலும் உங்களின் முயற்சிகளுக்கு தாமதம் உண்டாகும். பேசியபடி எதையும் செய்து முடிப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உங்களின் வாழ்க்கைக்கும், லட்சியத்திற்கும் உறுதுணையாக அமையும். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு வளர்ச்சியுடன் வருமானம் கிடைக்கும். பெண்களின் தொழில் வளம் பெறுவதற்கு எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்க பெறுவீர்கள். பாதுகாப்பான வளர்ச்சியை அடைவீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்: 
 
19.11.2021 வெள்ளி காலை 09.17 முதல் 21.11.2021 ஞாயிறு இரவு 08.57 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:
 
சித்திரை 3, 4 ஆம் பாதங்கள்:
 
வெளிப்படையான உங்களின் செயல்பாடுகளில் சிலருக்கு பொறாமையாக இருக்கும். ஏதாவது இடையூறுகள் செய்தாலும், அதனை சிரமமின்றி எதிர்கொண்டு, வெற்றி காண்பீர்கள்.
 
சுவாதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
தந்தை = மகன் உறவு பலப்படும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அழைப்பு விரைவில் வந்து சேரும். கடன் சுமை குறையும்.
 
விசாகம் 1, 2, 3 ஆம் பாதங்கள்:
 
தடைபட்ட காரியம் கைகூடும். வெளிநபர்களின் உதவி கிடைக்கும். சிக்கலான காரியங்களை சிரமமின்றி செய்து முடிப்பீர்கள். 
 
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, நீலம், மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, புதன்.
 
இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
வெள்ளிகிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை, காளி வழிபாடு செய்து விளக்கெண்ணெய் தீபமிட்டு பழங்கள் வைத்து உங்களின் வேண்டுதலை சொல்லி வர சகல காரியமும் சீக்கிரம் நிறைவேறும்.