நவம்பர் மாத ராசி பலன்கள் - 01.11.2021 முதல் 30.11.2021 வரை - மீனம்

நவம்பர் மாத ராசி பலன்கள் - 01.11.2021 முதல் 30.11.2021 வரை - மீனம்

காலத்தையும், வாழ்க்கையும் வீணடிக்காமல் செயல்படும் மீன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு லாப சனியுடன் ராசிநாதன் இணைந்திருப்பதும் பாக்கியஸ்தானத்தில் கேது அமர்ந்து லாபஸ்தானத்தை பார்ப்பதும் தடையற்ற பொருளாதார நிலை உருவாகும். குரு பெயர்ச்சிக்கு பின்பு புதிய செலவு உண்டாகும். கவலைகளை மறந்து வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். உயர பார்க்க எண்ணி அதற்கு தகுந்த வாய்ப்பையும் பெறுவீர்கள். மகிழ்ச்சியான நிகழ்வுகள் உங்களின் வாழ்வில் சந்திப்பீர்கள். குறுகிய முதலீடுகள் மூலம் நல்ல ஆதாயம் பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகம் சமமாக இருக்கும். வெற்றி தோல்வி சமமாக இருக்கும். ஆன்மீக சிந்தனைகள் உருவாகும். தெய்வ வழிபாடு செய்வதில் ஆர்வம் கொள்வீர்கள். வரவுக்குள் செலவுகளை கூட்டுபடுத்திக் கொள்வது நல்லது. கலைதுறையினருக்கு வாய்ப்பு குறைவாக இருந்தாலும் திட்டமிட்ட சில நிகழ்ச்சிகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பொருளாதார நிலை சீராக இருக்கும்.
 
சந்திராஷ்டம நாட்கள்: 
 
03.11.2021 புதன் இரவு 08.44 முதல் 05.11.2021 வெள்ளி இரவு 11.39 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:
 
பூரட்டாதி 4 ம் பாதம்:
 
பரபரப்பான செயல்பாடுகளில் உங்களை தயார்படுத்திக் கொள்வீர்கள். எதை அடைய நினைத்தீர்களோ அதை அடையும் வாய்ப்பை பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
 
உத்திரட்டாதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
வெளிநாடு பயணத்திற்கு பல நாட்கள் காத்திருந்த நிலை மாறி அதற்கான அனுமதி கிடைக்க பெறுவீர்கள். புகழ்ச்சியை விரும்பமாட் டீர்கள். சுற்றுலா நிறுவனம் சிறப்பாக இயங்கும்.
 
ரேவதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
கலைதுறையினருக்கு நல்ல வரவேற்பு இருக்கும். உங்களின் நோக்கம் நிறைவேறும். அலுவலக வேலை வெற்றி கரமாக குறித்த காலத்தில் செய்து முடிப்பீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், நீலம், பல வர்ணம்
 
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி, செவ்வாய்.
 
இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணி ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து 6 நல்லெண்ணெய் தீபமிட்டு பல கலர் பூ வைத்து வேண்டி கொள்ள உங்களின் தொழிலிலும், உத்தியோகத்திலும் சிறப்பான பலன் கிட்டும்.
 
கணித்தவர்: அருள் வாக்கு சோதிடர் திரு.ஆனந்ஜி
0091 9789341554