நவம்பர் மாத ராசி பலன்கள் - 01.11.2021 முதல் 30.11.2021 வரை - மகரம்

நவம்பர் மாத ராசி பலன்கள் - 01.11.2021 முதல் 30.11.2021 வரை - மகரம்

எண்ணிய எண்ணம் நிறைவேறும் வரை விடாமுயற்சி கொள்ளும் மகர ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ஜென்ம சனி, குரு இணைந்து இருப்பதும் நீச சூரியனை சனி பார்ப்பதும் மாத பின் பகுதியில் குரு மறைவுஸ்தானத்தை பார்ப்பது நல்ல பலன்களை பெற்று தரும். இரண்டாண் டுகளாக தொழில் வாய்ப்பில்லாமல் இருந்த நிலை மாறி தொழில் அமைய பெறுவீர்கள். எதிர்கால திட்டங்களுக்கு வழி வகை உருவாக்கிக் கொள்வீர்கள். வேலை இன்றி, இருந்தவருக்கு வேலை கிடைக்க பெறுவீர்கள். வெளிநாடு சென்று வர எண்ணும் சூழ்நிலையில் விரைவில் விசா கிடைக்க பெற்று வெளிநாடு செல்லும் சந்தர்ப்பம் அமையும். பொது வாழ்வில் அரசியலில் இருப்பவருக்கு நல்ல பதவியும் மதிப்பும் மரியாதையும் வந்து சேரும்.வங்கி கடன் வசதி சிலருக்கு கிடைக்கும் நல்ல நண்பர்களின் சேர்க்கையால் உதவிகளும், புதிய அனுபவமும் கிடைக்கும். பொருளாதாரம் நிறைவாக இருக்கும்.
 
சந்திராஷ்டம நாட்கள்: 
 
26.11.2021 வெள்ளி மாலை 05.25 முதல் 28.11.2021 ஞாயிறு இரவு 12.13 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:
 
உத்திராடம் 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
வாடிக்கையாளர்களை கவரும் விதமாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து தொழிலை விரைவுபடுத்திக் கொள்வீர்கள். புதிய தொழிலில் நிறைய அனுபவம் பெறுவீர்கள்.
 
திருவோணம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
தெளிவான முடிவுகளை எடுத்து செயல்பாடுகளில் நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள். கவலைகளை மறந்து ஆடம்பரமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
 
அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள்:
 
பாதுகாப்பான வளர்ச்சியை விரும்பி முதலீடுகளில் கவனம் செலுத்துவீர்கள். கதவை மற்ற விடயங்களை தவிர்த்து நிதானமுடனும், விவேகமுடனும் செயல்படுவீர்கள். பணவரவு இருக்கும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், நீலம், சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென் கிழக்கு, வடமேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு, வியாழன்.
 
இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
வியாழகிழமை நவகிரக குருவையும், கேதுவையும் வணங்கி 3 நெய் தீபமிட்டு உங்களின் வேண்டுதலை சொல்லிவர நினைத்த காரியம் கைகூடும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்க பெறுவீர்கள்.