நவம்பர் மாத ராசி பலன்கள் - 01.11.2021 முதல் 30.11.2021 வரை - கும்பம்

நவம்பர் மாத ராசி பலன்கள் - 01.11.2021 முதல் 30.11.2021 வரை - கும்பம்

தன்னையும், தன்னை சேர்ந்த வரையும் வளம் பெற நினைக்கும் கும்ப ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் யோகாதிபதி சுக்கிரன் அமர்ந்தும் தொழில் ஸ்தானாதிபதி பாக்கியஸ்தானத்தில் அமர்ந்தும் இருப்பது நல்ல பலன்களை பெற்று தரும். தேவைகளுக்கு தகுந்த வருமானத்தை பெருக்கி கொண்டு வளமான வாழ்வை உருவாக்கி கொள்வீர்கள். பிற்பகுதியில் குரு பெயர்ச்சிக்கு பின்பு உங்களின் வாழ்வில் வசந்தமான சூழ்நிலை உருவாகும். பொது வாழ்வில் மக்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு அரசியலில் புதிய பதவியும், மதிப்பும் உண்டாகும். மாற்றங்களை எதிர்பார்த்து செய்யும் காரியம் சில தடைகளை தந்தாலும் இறுதியில் நீங்கள் நினைத்ததே நடக்கும். சாதுர்யமாக பேசி உங்களின் காரியத்தை ஜெயமாக்கி கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் தீர்வாகும். நிலையான தொழிலிலுக்கு வழிகிடைக்கும். 
 
சந்திராஷ்டம நாட்கள்: 
 
01.11.2021 திங்கள் மாலை 04.22 முதல் 03.11.2021 புதன் இரவு 08.43 மணி வரை.
 
28.11.2021 ஞாயிறு இரவு 12.14 முதல் 01.12.2021 புதன் அதிகாலை 04.47 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:
 
அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள்:
 
விளையாட்டு துறை, கலைதுறையினருக்கு சிறப்பான காலமாக அமையும். அரசியலில் உங்களை மீறியாரும் எந்த முடிவு எடுக்க முடியாதபடி செயல்படுவீர்கள்.
 
சதயம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
வெளிநாடு செல்ல காத்திருக்கும் அன்பர்கள், அதற்கான வழிகள் கிடைக்க பெறுவீர்கள். அரசாங்க தடை நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். தொடர்ந்து செயல்பாடுகளை துரிதபடுத்துவீர்கள்.
 
பூரட்டாதி 1, 2, 3 ஆம் பாதங்கள்:
 
வங்கி, ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் எதிர்பார்த்த வளர்ச்சியை பெறுவீர்கள். கடல் கடந்த பயணம் செய்யும் நிலை உருவாகும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், மஞ்சள், வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, சனி.
 
இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வெற்றிலை மாலை அணிவித்து நெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள செய்யும் தொழிலில் விருத்தியும் பொருளாதார வளமும் பெறுவீர்கள்.