நவம்பர் மாத ராசி பலன்கள் - 01.11.2021 முதல் 30.11.2021 வரை - கடகம்

நவம்பர் மாத ராசி பலன்கள் - 01.11.2021 முதல் 30.11.2021 வரை - கடகம்

எடுத்த காரியத்தை விரைவாக தடையின்றி செய்யும் கடக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வையுடன் சனி பார்வையும் முன் பகுதியில் பார்க்கப்படுவதும் யோகாதிபதி செவ்வாய் நான்கில் அமர்ந்து தொழில், லாபஸ்தானத்தை பார்வை இடுவதும் பின் பகுதியில் குரு உங்களின் லாபஸ்தானத்தை பார்ப்பது மிக சிறந்த நல்ல பலனை பெறுவீர்கள். கருத்துள்ள நல்ல விடயங்களை பலரிடம் பகிர்ந்து கொள்வீர்கள். அரசியல்வாதிகளில் சிலருக்கு தொடர்ந்து இருந்து வந்த தடை நிலை மாறி, உங்களின் செயல்பாடுகள் செயல்பட துவங்கும். கணக்கிட்ட படி சிலர் காரியத்தை செயல்படுத்த உதவிகள் கிடைக்கும். உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் காரியங்கள் மேன்மை அடையும். பொது விடயங்களில் நீங்கள் தலையிடும் காரியம் நன்மையாக அமையும். முக்கிய ஆலோசனைகளால் உங்களை சார்ந்த பலருக்கு பலன் தரும்படி அமையும். வெளியூர், வெளிநாடு பயணம் சிறப்பாக அமையும். பொருளாதாரம் வளம் பெறும்.
 
சந்திராஷ்டம நாட்கள்: 
 
12.11.2021 வெள்ளி காலை 08.34 முதல் 14.11.2021 ஞாயிறு பகல் 02.27 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:
 
புனர்பூசம் 4ம் பாதம்:
 
புதுமையான பணிகளை செய்து மேன்மை அடைவீர்கள். விளையாட்டு துறையில் ஆர்வமாக இருப்பீர்கள். புதிய தொழில் துவங்கும். திட்டம் செயல்பட, உங்களின் முயற்சி பலன் தரும்.
 
பூசம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
சாதாரண விடயத்தை கூட ஆராய்ச்சி செய்து சரியா? என்று அறிந்து செயல்படுவீர்கள். தொழிலாளர்களின் வளர்ச்சிக்கு உதவி செய்வீர்கள். பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
 
ஆயில்யம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
அவசரமாக செய்த செயல்கள் கூட சில நேரம் நல்ல பலனை பெற்றுத் தரும். எதை செய்தாலும் சிறிய பதற்றம் இருக்கும். வரவுக்கு மீறிய செலவு வரும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, ஓரஞ்சு, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் பைரவர் வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபமிட்டு கொள்ளு பயறு சுண்டல் செய்து வைத்து வழிபாடு செய்து வர நன்மைகள் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும்.