மே மாத ராசி பலன்கள் - 2022 - துலாம்

மே மாத ராசி பலன்கள் - 2022 - துலாம்

விறுவிறுப்பான செயல்பாடுகள் அமைய பெற்ற துலாம் ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு லாபாதிபதி சூரியன் உச்சம் பெற்று ராசியை பார்ப்பதும் ஒரு தனஸ்தானத்தையும், விரைய ஸ்தானத்தையும் பார்வை இடுவதும் உங்களின் பொருளாதார நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். சிறந்த முதலீடுகள் மூலம் வருமானத்தை பெருக்கி கொள்வதுடன் புதிய யுக்திகளை அறியும் வாய்ப்பையும் பெறுவீர்கள். நல்ல விவசாய பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு விவசாய பொருட்கள் விலை உயர்வு பெற்று வளம் பெறுவீர்கள். அரசியல் தலையீடுகளை விரும்பமாட்டீர்கள். தனித்துவமான சூழ்நிலையை உருவாக்கி கொள்வீர்கள். புதிய பரிணாம வளர்ச்சியை விரும்பி ஏற்று கொள்வீர்கள். எதை செய்தாலும் அதில் ஒரு அர்த்தங்கள் இருக்கும் படி செயல்படுவீர்கள். கலை துறையினர் பல நாட்கள் கஷ்டம் விலகி, நன்மையும், புதிய வாய்ப்பையும் பெறுவீர்கள். இயற்கையாக கஷ்டபடுவர்கள் கண்டு வருந்துவதுடன் அவர்களுக்கு ஏதாவது உதவியை செய்வீர்கள். தொழிலில் நிலையான சூழ்நிலையை உருவாக்க நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியைத் தரும்.

சந்திராஷ்டம நாட்கள்: 
 
02.05.2022 திங்கள் அதிகாலை 04.50 முதல் 04.05.2022 புதன் பகல் 04.02 மணி வரையும்.
 
29.05.2022 ஞாயிறு பகல் 12.18 முதல் 31.05.2022 செவ்வாய் இரவு 07.18 மணி வரையும்.
 
நட்சத்திர பலன்கள்:

சித்திரை 3, 4 ஆம் பாதங்கள்:
 
குழப்பமான சூழ்நிலையிலிருந்து மீள்வீர்கள். எதிர்ப்புகள் குறைந்து வளர்ச்சி பாதையை நோக்கி செல்வீர்கள். எதை செய்தாலும் அதனை பற்றி பலமுறை யோசித்து செயல்பட்டு முன்னேற்றம் கண்டு வெற்றி பெறுவீர்கள்.
 
சுவாதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எளிதில் காரியத்தை செயல்படுத்துவீர்கள். அவசர காரியங்களில் நிதானமாக செயல்படுவதும் சாமர்த்தியமாக செயல்படுவதும் உங்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

விசாகம் 1, 2, 3 ஆம் பாதங்கள்:
 
குறைந்தபட்ச முதலீடுகளில் உங்களின் தொழிலை சிறப்பாக நடத்தி லாபம் காண்பீர்கள். மனசஞ்சலம் தீரும். விருப்பமான வரன் உங்களுக்கு அமைய பெற்று சந்தோசம் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, சிவப்பு, கருநீலம்.
 
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, ஞாயிறு.
 
இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு மாலை ராகு காலத்தில் நவகிரக வழிபாடும் மிளகு திரியில் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு தீபமும் இட்டு வணங்கி வர உங்களின் வேண்டு தல்கள் நிறைவேறும்.