மே மாத ராசி பலன்கள் - 2022 - ரிஷபம்

மே மாத ராசி பலன்கள் - 2022 - ரிஷபம்

வாழ்க்கை அவசியமான விடயங்களை செயல்படுத்தும் ரிஷப ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு லாபாதிபதியுடன் ராசிநாதன் உச்சம் பெறுவதும் லாபஸ்தானத்தை உங்களின் யோகதிபதி சனி பார்வை இடுவதும் உங்களுக்கு தொழிலிலும், உத்தியோகத்திலும் சிறந்த பலனை பெற்று தரும். எதையும் செயல்படுத்தும் முன்பு யோசித்தும் செயல்படுவீர்கள். புதிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் குறுகிய காலத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். எளிய வழிகளை பின் பற்றி நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழிலாளர்களின் பிரச்சனைகளை எடுத்து செல்லும்போது உங்களின் நிதானமான பேச்சுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். குடும்பத்திலுள்ள அனைவரிடமும் அன்பையும், நல்ல அரவணைப்பையும் கொண்டு விளங்குவீர் கள். சரியான பாதையை தேர்வு செய்து வளம் பெறுவீர்கள். காரணமில்லாமல் யாரையும் எதற்கும் கோப படமாட்டீர்கள். அரசியல் பிரவேசம் இனி உங்களுக்கு நல்ல பாதையை காட்டும் பொருளாதாரம் சிறக்கும்.
 
சந்திராஷ்டம நாட்கள்: 
 
18.05.2022 புதன் பகல் 11.02 முதல் 20.05.2022 வெள்ளி பகல் 01.24 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:

கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
காலமும், சூழ்நிலையும் அறிந்து செயல்படுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த நன்மை கள் தாமதமானாலும் எளிதில் நடக்கும். குறைந்த முதலீடு களில் நல்ல லாபம் பெறும். தொழில் சிறப்பாக இருக்கும்.

ரோகிணி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
அரசியலிலும், பொது வாழ் விலும் உங்களுக்கு நல்ல மரியாதையும், அந்தஸ்தும் கிடைக்கும். காரியவாதியாக செயல்பட்டு உங்களின் விடயங் களை திறம்பட செய்து முடித்து விடுவீர்கள்.
 
மிருகசீரிடம் 1, 2 ஆம் பாதங்கள்:
 
வாழ்க்கை வளம் பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எளிமை யுடன் செய்து முடிப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உங்களின் வளர்ச்சிக்கு நல்ல வழி காட்டும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
புதன், சனிகிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து முக்கிய திருவிழா காலங்களில் பூஜையில் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி வர உங்களின் எண்ணம் சிறப்பாக அமையும்.