மே மாத ராசி பலன்கள் - 2022 - மகரம்

மே மாத ராசி பலன்கள் - 2022 - மகரம்

வளமான வாழ்வுக்கு வழி தேடும் ஆர்வமுள்ள மகர ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் சுகா திபதியும், முயற்சி ஸ்தானத்தில் யோகாதிபதி சுக்கிரனுடன் குரு ஆட்சி பெற்று இணைவதும் உங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் நற்பலன்களை பெற்று தருவார்கள். சாதாரண செயலை கூட கவனமுடன் செய்து சிறப்பாக நற்பலன் பெறுவீர்கள். உரிய கடமையை செய்து அதற்கான பலனை அடைவீர்கள். தொழிற்சங்க பணிகளை கூர்மையாக கண்காணித்து செயல்பட்டு தொழிலாளர்களை பேணி பாதுகாத்து வருவீர்கள். முதலீடு இல்லாத தொழிலைச் செய்து சிலருக்கு நல்ல வருமானம் கிடைக்க பெறுவீர்கள். புதிய திட்டங்களை செயல்படுத்த இதுவரை இருந்த தடைகள் நீங்கும். உங்களின் முயற்சிக்கு எதிர்பார்த்த நல்ல பலன் கிடைக்கும். அரசியலில் குழப்பத்தை தீர்க்கும் சரியான ஆலோசனைகளை வழங்கி, முன்னின்று நடத்தி தருவீர்கள். பாதியில் நின்ற காரியங்கள் செயல்பட துவங்கும். பொருளாதார வளம் நன்றாக இருக்கும்.
 
சந்திராஷ்டம நாட்கள்: 
 
09.05.2022 திங்கள் பகல் 02.19 முதல் 11.05.2022 புதன் இரவு 10.36 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:

உத்திராடம் 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
திறமைக்கு ஏற்ற உத்தியோகம் கிடைக்க பெறுவீர்கள். சாதிக்க நினைத்த காரியத்தை வெற்றி கரமாக செய்து முடிப்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்க பெறுவீர்கள்.
 
திருவோணம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
அரசியல் வாழ்க்கை சிறப்பாக முன்னேற்றம் கிடைக்க முக்கிய பொறுப்புகள். சிலருக்கு கிடைக்கும் செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிறந்த வல்லுநர்களாக செயல்படுவீர்கள்.

அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள்:
 
ராணுவம், காவல் துறையினருக்கு பதவி உயர்வு வெகுமதிகள் கிடைக்க பெறுவீர்கள். விளையாட்டு துறையினர் சிறந்த பயிற்சியை எடுத்து முன்னேறி பல போட்டிகளில் கலந்து கொண்டு பாராட்டு பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், ஆரஞ்சு, மஞ்சள் (சந்தன நிறம்).
 
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு,
 
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி, சனி.
 
இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய் கிழமை சுப்ரமணியரையும், சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடும் தொடர்ந்து மேற்கொண்டு, உங்களின் வேண்டுதலை சொல்லி வர சகல காரியமும் வெற்றியைத் தரும்.