மே மாத ராசி பலன்கள் - 2022 - கன்னி

மே மாத ராசி பலன்கள் - 2022 - கன்னி

காலம் பொன் போன்றது என்று உணர்ந்து செயல்படும் கன்னி ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை இருப்பதுடன் ராசிநாதன் பாக்கியஸ் தானத்தில் இருப்பதும், எட்டாமிடத்து அதிபதி ஆறாமிடத்திலும், விரயாதிபதி சூரியன் எட்டாம் இடத்திலும் அமர்வதும் உங்களின் ராஜயோக பலன்களாக அமைய பெறுவீர்கள். எதையும் இழந்துவிடாமல் கிடைத்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி வளமான வாழ்வு பெறுவீர்கள். அறிவியல் பூர்வமான பல காரியங்களில் நீங்கள் முன்னேறவீர்கள். சிலருக்கு தீடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். பல நாற்பட்ட கடன் சிறு முடிவுக்கு வரும் எதையும் சிறந்த முறையில் செய்து காட்டுவீர்கள். அவசரத்தில் எடுக்கும் முடிவு கடைசியில்  லக்ஷ்மியிடத்தில் முடியும். பொது விடயங்களில் எல்லோரின் முடிவை ஏற்றுக் கொள்வீர்கள். தொழிலில் கடந்த கால நிலையிலிருந்து மீண்டு, சிறந்த தொழில் வளர்ச்சியை பெறுவீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு கடந்த கால கல்வி பயனற்றதாக இருந்தாலும், இனி கல்வி மிகப் பெரிய மாற்றத்தை தரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும்.

சந்திராஷ்டம நாட்கள்: 
 
27.05.2022 வெள்ளி அதிகாலை 03.14 முதல் 29.05.2022 ஞாயிறு காலை 07.51 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:

உத்திரம் 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
உறுதியான செயல்பாடுகள் மூலம் நீங்கள் எதிர்பார்த்த படி எல்லா விட யங்களும் சிறப்பாக அமையும். அரசியலிலும், பொது வாழ்விலும் சிறந்து விளங்குவதுடன் வளமான வாழ்வும் பெறுவீர்கள்.
 
ஹஸ்தம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
மனதிற்கு எது சரியாக இருக்கும் என்று உணர்ந்து செயல்படுவீர்கள். தனியாக எதையும் செய்ய தயங்குவீர்கள். திட்டமிட்ட செயல்பாடுகள் குறித்த காலத்தில் சிற்பபாக அமைய பெறுவீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.
 
சித்திரை 1, 2 ஆம் பாதங்கள்:
 
சிறு சிறு தொழிலாக செய்து வந்த உங்களுக்கு பெரிய தொழில் வாய்ப்பு அமைய பெறுவீர்கள். எதற்கும் உங்களின் முயற்சியே எளிய வெற்றி பெற்று தரும். விளையாட்டு வீரர்களுக்கு நல்ல காலமாக அமையும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள், சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், ஞாயிறு.
 
இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
 
வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் விளக்கு போட்டு சிவப்பு நிற பூ வைத்து உங்களின் வேண்டுதலை சொல்லி வர விரைவில் நன்மை கிட்டும்.