ஜுலை மாதம் ராசி பலன்கள் 2025 - ரிஷபம்

ஜுலை மாதம் ராசி பலன்கள் 2025  - ரிஷபம்

சரியான பாதை தெரிவு செய்து அதன் வழியில் பயணிக்கும் ரிஷப ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் குரு அமர்ந்து மறைவு இடங்களையும், தொழில் ஸ்தானத்தையும் பார்ப்பதால் எதிலும் வெற்றியை தரும். எல்லாவித காரியமும் அனுகூலமாக அமையும். கொடுத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். குறைபாடுகளை நீக்கி கொள்ளும் வாய்ப்பையும் பெறுவீர்கள்.
 
உங்களின் ராசிநாதன் ஆட்சி பெற்று இருப்பது உங்களின் செயலில் துரித தன்மையும், எடுத்த காரியத்தை முடிக்கும் திறமையும் உண்டாகும். சுகஸ்தானாதிபதி தனஸ்தானத்தில் அமர்வதால் வாகனங்களை புதுப்பித்து கொள்வதும் புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு சிலருக்கு அமையும். உங்களின் முயற்சிக்கு உறுதுணையாக நண்பர்களின் உதவி கிடைக்கும். செய்யும் தொழிலில் நல்ல வளர்ச்சி கிடைக்கும். தொழில் ஸ்தானாதிபதியை குரு பார்க்க தொழிலில் வளர்ச்சி பெற்று நல்ல வளம் கிடைக்கும்.
 
அரசியலிலும் பொது வாழ்விலும் உங்களின் ஈடுபாடுகள் சிறப்பாக அமையும். குடும்பத்தில் இருந்த பல குழப்பங்களுக்கு விடிவு காலம் பெற்று, வளம் பெறுவீர்கள். யாரையும் நம்பிக்கொண்டு இருக்காமல் உங்களின் செயல்பாடுகளில் துணிச்சலாக முடிவுகளை எடுப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் சற்று கவனம் செலுத்த வேண்டி வரும். தன்னை மதிப்பவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வீர்கள். எதையாவது சாதிக்க வேண்டுமென்று எண்ணம் உண்டாகும். பழைய நண்பரின் சந்திப்பு உங்களுக்கும் மகிழ்ச்சி தரும். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
வெண்மை, மஞ்சள், சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
வெள்ளி, சனி, வியாழன்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
09-07-2025 புதன் அதிகாலை 04.33 முதல் 11-07-2025 வெள்ளி பகல் 01.32 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய்கிழமைகளில் மாரியம்மனுக்கு விளக்கெண்ணெய் தீபமேற்றி புளி சாதம், அம்மனுக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்கிவிட்டு வர உங்களின் உடல்நலனும், தொழிலும் சிறப்பாக அமையும்.