ஜுலை மாதம் ராசி பலன்கள் 2025 - விருச்சிகம்

விடாமுயற்சியின் மூலம் உங்களின் செயலை செய்யும் விருச்சிக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதனின் பார்வையுடன் சுக்கிரன் பார்வை பெறுவது மிகவும் சிறப்பான பலன்கள் உருவாகும். சனி ராகு சுகஸ்தானத்தில் இணைவு பெற்று உடல் உபாதைகளை தந்து வந்த நிலை மாறி குரு பார்வையால் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். திறமையான உங்களின் செயல்பாடுகள் மூலம் எத்தனை சோதனை வந்தாலும் அத்தனையும் துளாக்கி வெற்றி காண்பீர்கள். தன்னம்பிக்கைக்கு வெற்றி நிச்சயம்.
தொழில் ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் அமர்ந்து பலம் பெறுவதால் உங்களின் தொழில் தொய்வின்றி இயங்கும். ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பது பலம் பெற செய்யும். களத்திர ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று ராசியை பார்ப்பதால் கூட்டு தொழிலில் முன்னேற்றம் பெறுவீர்கள். எதிர்கால பலன் கருதி நீங்கள் எடுக்கும் காரியம் நன்மையை தரும். ஆன்லைன் வர்த்தகத்தில் சற்று யோசித்து செயல்படுதல் நல்லது. நினைத்த காரியத்தை வெற்றி காண்பீர்கள்.
உங்களின் யோகாதிபதி சந்திரன் பலம் பெற்று அமர்வதும் கேதுவுடன் சம்மந்தம் பெறுவதும் தொட்ட காரியம் துலங்கும். உதவிகள் தானே வந்து அமையும். சிலருக்கு சொந்தமாக தொழில் துவங்கும் வாய்ப்புகள் அமையும். எதையும் அவசர நிலையில் செயல்படுத்தாமல் சற்று நிதானமாக செயல்படுவதன் மூலம் உங்களின் வெற்றி உறுதியாகும். தனாதிபதி குரு அட்டமஸ்தானத்தில் அமர்வதால் முதலீடுகளில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உங்களிடம் ஆசையான வார்த்தை பேசுவதை நம்பாமல் உங்களின் உறுதியை நம்பி செயல்படுவது நல்லது. பொது வாழ்வில் உங்களுக்கு உதவிகளும் ஆதரவும் கிடைக்கும். சொந்த உறவுகளின் மூலம் சிலருக்கு தொல்லை வரலாம். எச்சரிக்கை அவசியம்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஆரஞ்சு, வெண்மை, பச்சை.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், புதன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
22-07-2025 செவ்வாய் காலை 08.27 முதல் 24-07-2025 வியாழன் பகல் 12.21 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை ராகு காலத்தில், பைரவருக்கும் நவகிரகங்களுக்கும் நல்லெண்ணெய் தீபமேற்றி புளி சாதம் செய்து பக்தர்களுக்கு தானம் செய்து மனமுருக வேண்டிக் கொள்ள வெற்றியை பெற்று தரும்.