ஜுலை மாதம் ராசி பலன்கள் 2025 - துலாம்

எடுத்த காரியத்தை முடிக்கும் வரை தொடர்ந்து செயல்படும் துலாம் ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ரிஷபத்தில் ஆட்சி பெற்று அமர்வதும் ராசிக்கு குரு பார்வை பெறுவதும் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்யும் வாய்ப்பை பெறுவீர்கள். யாரையும் நம்பி கொண்டிருக்காமல் நீங்களே களத்தில் இறங்கி வேலை செய்ய துவங்குவீர்கள். புனித யாத்திரை சென்று வருவீர்கள்.
பஞ்சமஸ்தானத்தில் சனியுடன் ராகுவும் இணைவு பெறுவதும் குரு பார்வை அவர்களுக்கு கிடைப்பதும் குல தெய்வ வழிபாடு செய்தல், புனித யாத்திரைக்கு சென்று வருதல், புனித நீராடல் போன்ற சூழ்நிலைகள் உருவாகும். தந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட வாய்ப்பு அமையும். தந்தையில்லாதவர்கள் அவரை நினைத்து தர்ம காரியம் செய்ய வேண்டிவரும். அரசியலிலும் பொது வாழிவிலும் ஈடுபாடு கொள்ள சந்தர்ப்பம் உண்டாகும். தொழிலில் போட்டிகள் இன்றி சிறப்பாக வளம் பெறுவீர்கள். உதவிகள் செய்ய நல்ல நண்பர்களின் சேர்க்கை உதவியாக அமையும்.
உங்களின் ராசிக்கு இரண்டாமிடத்து தனாதிபதி செவ்வாய் தொழில் ஸ்தானாதிபதியான சந்திரனுடன் லாபஸ்தானத்தில் இணைவு பெறுவதும் ராசிநாதனின் நட்சத்திரத்தில் சந்திரன் அமர்ந்து அம்சத்தில் ராசியில் அமர்வது கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். நினதை்த காரியத்தை எளிதில் நடத்தி காட்டுவீர்கள். பாதுகாப்பான உங்களின் செயல்பாடுகள் உங்களை ஊக்கப்படுத்தும் கணவன் - மனைவி இருவரும் அன்னியோன்யமான உறவுகள் பலப்படும். கேள்வி ஞானம் கிடைக்க பெறுவீர்கள். எதையும் அறிந்து கொள்ள அதில் உள்ள நணுக்கங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் கொள்வீர்கள். உங்களின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிரிகளை எளிதில் வெல்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, வியாழன்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
20-07-2025 ஞாயிறு அதிகாலை 05.48 முதல் 22-07-2025 செவ்வாய் 08.28 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி பூ மாலை சாத்தி மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள உங்களின் அனைத்து பிரச்சனைகளும் விலகி சுபிட்சம் பெறுவீர்கள்.