ஜுலை மாதம் ராசி பலன்கள் 2025 - சிம்மம்

ஜுலை மாதம் ராசி பலன்கள் 2025  - சிம்மம்

விருப்பமான செயலை செயல்படுத்தும் சிம்ம ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் லாபஸ்தானத்தில் குருவும் இணைவு பெறுவதும் தொழில் ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று அமர்வதும் உங்களின் தொழிலில் எதிர்பாராத சில தனவரவு கிடைக்க பெறுவீர்கள். எதை கொடுத்தாலும் அதில் வளர்ச்சியை பெற்று மேன்மை அடைய செய்வீர்கள். குல தெய்வ வழிபாடுகள் மூலம் உங்களின் நீண்ட கால பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள்.
 
விரையாதிபதியுடன் யோகாதிபதி இணைவு பெற்று சனி ராகுயை பார்ப்பதும் சனி ராகுவை குரு பார்வை பெறுவதும் சிறப்பான நற்பலன்களை பெற்று தரும். ஆன்லைன் வர்த்தகம் சிறப்பான நல்ல வளர்ச்சியை பெற்று தரும். பல நாட்கள் வராமல் இருந்த நிலுவைகள் கிடைக்க பெறுவீர்கள். உறுதியுடன் செயல்பட்டு பல காரியங்களை செய்து முடிப்பீர்கள். தீய நண்பர்களின் சேர்க்கையை குறைத்து கொண்டு விட்டு கொடுத்து காரிய தடைகளை நீக்கி வளம் பெறுவீர்கள்.
 
அரசியலிலும், பொது வாழ்விலும் மீண்டும் சாதிக்கும் உன்னத நிலையை பெறுவீர்கள். வேலை செய்யுமிடத்தில் உங்களுக்கு என்று மரியாதையும் சலுகைகளும் கிடைக்க பெறுவீர்கள். திடமான நம்பிக்கையுடன் காரியங்களை செய்து மேன்மை அடைவீர்கள். தொந்தரவுகளை செய்து வந்தவர்கள் உங்களை விட்டு விலகி விடுவார்கள். எதை செய்தாலும் அதில் நியாயமும், அர்த்தமும் இருக்கும்படி செயல்படுவீர்கள். கலைத்துறையினருக்கு தொழில் பலம் உண்டாகும். பல இடங்களுக்கு சென்று நிகழ்ச்சிகளை செய்து வந்த உங்களுக்கு ஒரே இடத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்க பெறுவீர்கள். பொருளாதார நிலை மேன்மை அடையும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
சிவப்பு, மஞ்சள், வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
ஞாயிறு, வியாழன், வெள்ளி.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
15-07-2025 செவ்வாய் இரவு 12.31 முதல் 18-07-2025 வெள்ளி அதிகாலை 03.27 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனி, ஞாயிறு கிழமைகளில் ராகு காலத்தில் பைரவருக்கு தேங்காயில் நல்லெண்ணெய் ஊற்றி செவ்வரளி பூ மாலையிட்டு புளி சாதம் வைத்து வேண்டுதலை சொல்லிவர சகல காரியம் வெற்றியை தரும்.