ஜுலை மாதம் ராசி பலன்கள் 2025 - மிதுனம்

ஜுலை மாதம் ராசி பலன்கள் 2025  - மிதுனம்

உறுதியான மனநிலை கொண்டு எதையும் செயல்படுத்தும் மிதுன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் ராசிநாதன் அமர்வதும் ராசியில் குரு அமர்ந்து பார்க்கும் இடங்களும் சிறப்பான பலன்களை பெற்று தரும். உங்களின் ஆலோசனைகள் சிறப்பாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.
 
ராசியில் குருவுடன் சூரியன் இணைவு பெறும் போது மனவலிமையும் எதையும் துணிச்சலுடன் செயல்படும் வைராக்கியமும் கிடைக்கும். உன்னதமானவர்களே உங்களுக்கு உதவி செய்வார்கள். குடும்பத்தில் பல குழப்பங்கள் தீரும். வெட்டியாகப் பேசி திரியும் அன்பர்களுக்கு சரியான பதிலடி கொடுப்பீர்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் ஆர்வம் உண்டாகும். எதை செய்தாலும் சற்று யோசித்து செயல்படுவீர்கள். நல்ல விடயங்களை தள்ளி போடாமல் உடனே செயல்படுத்துவீர்கள். தனஸ்தானத்தில் ராசிநாதன் புதன் அமர்ந்து பொருளாதாரத்தில் ஓரளவு நன்மையை பெற்று தருவார்.
 
பாக்கியஸ்தானத்தில் சனியுடன் ராகு இணைவு பெறுவது குரு பார்வை பெறுவது சிறப்பான நற்பலன்கள் உண்டாகும். நல்ல தொழில் வாய்ப்புகளை பெறுவீர்கள். கலைதுறையினருக்கு ஒப்பந்த அடிப்படையில் வாய்ப்பு அமையும். அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். லாபாதிபதி செவ்வாயுடன் தனாதிபதி சந்திரன் இணைவு பெற்று பாக்கியஸ்தானத்தை பார்ப்பது பல தொழில் வாய்ப்புகளை பெறுவீர்கள். எதையும் முன்கூட்டியே யோசித்து செயல்படும் திறன் உண்டாகும். பொறுப்புடன் செயல்பட்டு காரியத்தை சீராக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையின்றி சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பு ஆலோசனையை கேட்டு செயல்படுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
பச்சை, மஞ்சள், சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
மேற்கு, வடமேற்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
புதன், வியாழன், ஞாயிறு.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
11-07-2025 வெள்ளி பகல் 01.33 முதல் 13-07-2025 ஞாயிறு இரவு 08.05 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வியாழக்கிழமைகளின் நவகிரக குருவுக்கு கொண்டைகடலை மாலையும், மஞ்சள் நிற துணியும் அணிந்து நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்ள, உங்களின் சகல காரியமும் மேன்மையை தரும்.