ஜுலை மாதம் ராசி பலன்கள் 2025 - மேஷம்

விரும்பிய வாழ்க்கையை அடைய போராடும் மேஷ ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தன காரகன் ஆட்சி பெற்று ராசிநாதன் பஞ்சம ஸ்தானத்தில் அமர்வதும் திறம்பட செயல்படும் பாக்கியத்தை பெறுவீர்கள். தொழில் ஸ்தானாதிபதி சனி லாபஸ்தானத்தில் அமர்ந்து ராகுவுடன் இணைவு பெறுவதால் புதிய தொழில் வாய்ப்புகள் அமைய பெறுவீர்கள்.
உங்களின் ராசிக்கு மூன்றாமிடத்தில் அமர்ந்து ஏழாமிடத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் குரு பார்ப்பது உங்களுக்கு குரு இருக்குமிடத்தை விட பார்க்குமிடம் சிறப்பு. நவாம்சத்தில் தனாதிபதியுடன் குரு இணைவு பெற்று ராசிநாதனின் பார்வை பெறுவது எடுத்த காரியத்தில் வெற்றியையும், நினைத்ததை நினைத்தபடி செய்யும் வலிமையும் பெறுவீர்கள். பஞ்சாமாதிபதியுடன் குரு இணைவு பெறுவதும் உங்களின் கடந்த கால தொய்வு நிலையை மாற்றி வளம் பெறுவீர்கள்.
இம்மாதம் 06-07-2025 வரை குருவின் அஸ்தங்கம் முடிந்து உதயமானதும் உங்களுக்கு சரியான வாழ்க்கை துணை அமையும். தொழில் இல்லாதவருக்கு தொழில் வாய்ப்பும் அமைய பெறுவீர்கள். குறுகிய கால பலன்களை பெறுவீர்கள்.. சுமையாக இருந்த பல பணிகள் வெகு எளிதாக முடித்துக் கொள்வீர்கள். சோதனைகளிலிருந்து விடுபடு வீர்கள். எண்ணிய எண்ணம் ஈடேறும். பொருளாதார நிலையில் தன்னிறைவு உண்டாகும். கருத்து வேறுபாடுகள் மறைந்து நிம்மதியை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
06-07-2025 ஞாயிறு மாலை 05.26 முதல் 09-07-2025 புதன் அதிகாலை 04.32 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய் கிழமைகளில் நரசிம்மர், சுப்ரமணியர் வழிபாடு செய்து நெய் தீபமேற்றி சிவப்பு நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.