ஜுலை மாதம் ராசி பலன்கள் 2025 - மீனம்

தனக்கான செயல்களில் தானே முன் நின்று செய்யும் மீன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு அட்டம ஸ்தானத்தையும் விரையஸ்தானத்தையும் பார்ப்பதால் கெடுபலன் குறையும். தொழில் ஸ்தானத்தை சூரியனுடன் பார்ப்பது தொழில் விருத்தியை செய்ய வங்கி மூலம் கடன் பெற்று வளப்படுத்திக் கொள்வீர்கள். உறவுகளை நீங்கள் விரும்பினாலும் அவர்கள் உங்களிடம் வேண்டாத உறவுகளாக தற்காலிகமாக இருப்பார்கள். கண்டு கொள்ளாமல் இருந்தால் பிற்காலத்தில் சரியாகும்.
செவ்வாயுடன் கேது ஆறாமிடத்தில் இணைவு பெறுவது எதிர்ப்புகளை விரட்டும் வலிமையும், எதிரிகளை எப்படி அணுகுவது என்ற யுக்தியையும் கையாள்வீர்கள். பணபலம் படைத்தவர்கள் கூட உங்களிடம் வளம் பெற்று திகழ்வார்கள். குறைவின்றி எதிலும் வெற்றியை காண்பீர்கள். மத்திம வயதில் இருக்கும் அன்பர்களுக்கு இது பொங்கு சனி காலம் என்பதால் சனி கடும் வேலை வாங்கினாலும் அதற்குரிய வளர்ச்சியை பெற்று தருவதுடன் பொருளாதாரத்தில் வளர்ச்சியையும் பெற செய்வார். இப்படி பட்ட காலத்தில் சிறுதொகையை தான தர்மம் செய்து கொள்வது மிக சிறப்பான நற்பலன்களை தரும்.
உங்களின் முயற்சி வெற்றி பெற சுக்கிரன் ஆட்சி பெற்று அமைவதால் உங்களின் எண்ணங்களை செயல்படுத்த ஊக்கபடுத்தி வேண்டியதை கிடைக்க உதவி செய்வார். உடல்நலனின் சற்று கவனம் செலுத்த வேண்டிவரும். குடும்ப ஒற்றுமையும், செய்தொழில் மேன்மையும் பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் கொண்டு செயல்படுவீர்கள். கூட்டு தொழிலில் நற்பலன்கள் கிடைக்க. நீண்ட நாட்கள் உங்களின் அன்பை தெரியபடுத்தாமல் இருந்த வரும் உங்களின் அன்பை வெளிபடுத்துவீர்கள். எதையும் செயல்படுத்தும் போது சம யோசிதமாக செயல்படுவீர்கள். தைரியமே உங்கின் மூலதனமாக அமைந்து செயல்படும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், பச்சை, ஆரஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடகிழக்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், செவ்வாய், புதன்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
04-07-2025 வெள்ளி அதிகாலை 05.52 முதல் 06-07-2025 ஞாயிறு மாலை 05.25 மணி வரை.
31-07-2025 வியாழன் பகல் 01.06 முதல் 02-08-2025 சனி இரவு 12.46 மணி வரையும்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை தோறும் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபம் போட்டு அரளிப் பூ மாலை போட்டு வணங்கி வர அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
கணித்தவர்:
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554